சாபுதானா அடை



என்னென்ன தேவை?
 
புழுங்கலரிசி - 1 கப்,
நைலான் ஜவ்வரிசி - 1/2 கப்,
துருவிய கேரட் - 1 கப்,
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்),
பாசிப்பருப்பு, துவரம் பருப்பு - தலா 1 கப்,
முளைகட்டிய கொள்ளு - 1 கப்,
இஞ்சி - சிறு துண்டு,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு,
எலுமிச்சைச்சாறு - சிறிது.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். தண்ணீரை உறிஞ்சி பொல பொலவென்று ஆகிவிடும். இத்துடன் நறுக்கிய குடைமிளகாய், கேரட் துருவல், புளிப்புக்கு தகுந்தாற்போல் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து வைக்கவும். புழுங்கலரிசியை ஊறவைத்து, இஞ்சி, மிளகு, பச்ைசமிளகாய் ேசர்த்து அரைக்கவும். பாசிப்பருப்பு, துவரம் பருப்பை தனியாக ஊறவைக்கவும்.

ஊறிய பருப்பு வகைகளுடன், முளைகட்டிய கொள்ளு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். புழுங்கல் அரிசி மாவு, பருப்பு மாவை ஒன்றாக கலந்து, தேவையான உப்பு சேர்த்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு எடுப்பதற்கு முன் ஜவ்வரிசி கலவையை அடையின் மேல் தூவி ஒரு நிமிடம் வைத்தெடுத்து பரிமாறவும்.