நாவிற்கினிய அடை, தோசை வகைகள்நவதானியம், சிறுதானியம் போன்றவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு வகைகளின் செய்முறைகளை தன் அம்மாவிடம் கற்றுக் கொண்டவர். சென்னை வந்ததும் அதை மறந்துவிடாமல் தொடர்கிறார். அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு பாரம்பரிய சமையல் கலையை கற்றுக் கொடுக்கிறார்.

அந்த சமையல் கலை குறித்து புத்தகங்களாகவும் எழுதியுள்ளார். பொதிகை தொலைக்காட்சி உட்பட பல்வேறு தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சிறுதானிய சமையல் கலை குறித்து எழுதுவது, சக தோழிகளுக்கு செய்து காட்டுவது, கற்றுக் கொடுப்பதில் தீராத தாகம் உடையவர். மேலும் சமையல் கலையில் ஆர்வமுடைய தோழிகளுக்கு அதன் நுணுக்கங்களை கற்றுத்தருவதிலும் ஆர்வம் உடையவர்.

சமையல் கலைஞர்-சூர்யா

எழுத்து வடிவம்: கே.கலையரசி
தொகுப்பு: ஸ்ரீதேவிமோகன்