ப்ரியங்களுடன்...
* ‘பிரான்மலை’ கொடுங்குன்றீஸ்வரர் ேகாயில் ஆன்மிகத் தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி! - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
* ஒரு துளி தாய்ப்பால் தங்கத்தை விட விலை மதிப்பானது. அது ஒரு ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க வழிவகுக்கும் என்பதை டாக்டர் நித்யா மூலம் தெரிந்து கொண்டேன். - கோகிலாராஜு, திருவாரூர்.
* பேடிஎம் குரலுக்கு சொந்தக்கார பெண்களை தேடிப்பிடித்து கௌரவப்படுத்திய உங்கள் தாராள மனசுக்கு பலே பாராட்டு. - அ.யாழினி பர்வதம், சென்னை.
* தனக்கு கணவனாக வரும் ஆண் எப்படிப்பட்ட குண நலன்கள் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவு ஒவ்வொரு பெண்ணிடமும் தெளிவாக இருக்கிறது என்பதை ‘நாகரீகம்’ சிறுகதை தெளிவாக உணர்த்துகிறது. - எஸ்.நந்தினி, சென்னை.
* பிரியாணி, குருமாவில் மணம் வீசும் இலையான பிரிஞ்சி இலையின் சிறப்புகளை தெரிந்து வியந்து போனோம். - த.சத்யநாராயணன், அயன்புரம்.
* ‘உப்புக்கண்டம் மெஸ்’, பெயரே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பெண் தனியாக நின்று ஹோட்டலை நடத்துவது என்றால் எவ்வளவு துணிச்சல் வேண்டும். கருவாடு தொக்கு, சென்னாங்குன்னி பொடி, ஆப்பம்-மட்டன் நல்லி இவைகளை படிக்க படிக்க நாக்கில் நீர் துளிர்ந்தது. - வண்ணை கணேசன், சென்னை.
* எழுத்து மேல் ஏற்பட்ட ஆர்வத்தால் 72 வயதில் குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதியுள்ள கீதா கங்காதரனின் சிறந்த முயற்சி பாராட்டுக்குரியது. - செ.சோனிகா, கரூர்.
* பட்டாசுகள் வடிவில் சாக்லேட் மிட்டாய்களை வடிவமைத்து அசத்தும் ஜோதிபாசு-ஆனந்த ரேஷ்மி இருவரும் சாதனையாளர்களே. - ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்.
* பெண்கள் ஆபத்துகளுக்கு பயந்து கொண்டு அப்படியே இருந்து விடக் கூடாது. கலப்பு தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என சொன்ன தீபிகாவின் பேட்டி பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வரவழைத்திருக்கும். - டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
* அட்யா… பட்யா என்ற ஒரு விளையாட்டு இருப்பதை இப்போதுதான் முதல் முதலாக அறிந்து கொண்டதில் அளவற்ற ஆனந்தம் அடைந்தேன். இப்படியொரு விளையாட்டில் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளும் பதக்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது. - என்.கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி.
அட்டைப்படம்: சப்னா ஐயர் புகைப்படம்: விகாஸ்ராஜா மேக்கப்: சரண்யா
|