குறைந்த வலியுடன் எளிமையான சிகிச்சைக்கு உதவும் லேசர்; மைக்ரோவேவ் அப்லேஷன் கருவிகள்!



லேசர் சிகிச்சை முறையில் பல விதமான நோய்களையும் குறைந்த வலியில் சிகிச்சையளித்து குணப்படுத்தி விடலாம். எளிதாகவும் குறைந்த வலியில் குறைந்த நேரத்தில் லேசர் சிகிச்சையை செய்து விடுவதால் மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கிறார்கள்.
இந்த லேசர் சிகிச்சையை குறைந்த வலியுடன் மிக எளிமையான வடுவற்ற மிகச் சிறந்த சிகிச்சைக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் நவீன மருத்துவக் கருவிகள் வாயிலாக சென்னை ஷெனாய் நகரில் கடந்த 35  ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையை பெற்றுச் செயல்பட்டு வருகிறது ஹண்டே மருத்துவமனை.

இந்த மருத்துவமனையில் கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவக் கருவிகள் குறித்தும் மருத்துவரிடம் பேசும் போது, ‘‘நோய்கள் பலவிதமான வலிகளைக் கொடுத்தாலும் அதற்கான சிகிச்சைகள் மிக எளிதாக குறைந்த வலியுடன் கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய நோக்கத்திற்காக எங்கள் மருத்துவமனையில் புதிதாக லேசர்  மற்றும் மைக்ரோவேவ் அப்லேஷன் (Microwave Ablation) ஆகிய இரண்டு நவீன சிகிச்சைக் கருவிகள் மூலமாக சிகிச்சையளித்து வருகிறோம். 

பல்வேறு சிகிச்சைகளுக்கு இந்தக் கருவிகள் மிகவும் பயனுள்ளவையாகும். எதிலும் அமர்வதற்கே அச்சம், பிரச்னையை வெளியே சொல்வதற்கு கூச்சம் என மூல வியாதியால் (Piles) பலரும் படும்பாடு சொல்லி மாளாது. ஆபரேசன் செய்துதான் அதை அகற்ற வேண்டும் என்கிற நிலை இருந்தது. ஆபரேசனுக்கு பலர் அஞ்சுவதுண்டு.

ஆனால், குறைந்த வலியுடன் லேசர் சிகிச்சை வாயிலாக மூலக்கட்டியின் ரத்தக் குழாய்களை சுருங்க வைத்து மூலப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். ஆசனவாய் வெடிப்பு எனப்படும் பிளவு (Fissure), புண் புரை எனப்படும் பிஸ்டுலா, Finals (pilonidal sinus) எனப்படும் புட்டங்களில் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றையும் லேசர் வாயிலாக எளிதாக குறைந்த வலியுடன் தீர்க்கலாம். சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதையில் கல் அடைப்பு இருந்தால் (Urinary Kidney Stone) உண்டாகும் வலி மிகக் கடுமையானது. சிறுநீர் கழிப்பதே பெரும் போராட்டமாக இருக்கும். இந்தக் கல்லை உடைத்துப் பொடியாக்கி எளிதாக வெளியேற்றவும் லேசர் சிகிச்சை பெரிய அளவில் கைகொடுக்கிறது.

நீண்ட நேரம் நிற்பவர்கள் மட்டுமின்றி இன்று பலருக்கும் பல்வேறு காரணங்களால் நரம்புச் சுருள் எனும் வெரிகோஸ் வெயின் பாதிப்பு (Varicose veins) ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கான தீர்வை லேசர் சிகிச்சை மிக எளிதாக ஏற்படுத்திக் கொடுக்கிறது. இடுப்பு, வயிறு, தொடை,கை எனப் பல்வேறு இடங்களில் சேரும் கொழுப்புகள் உடல் அழகைக் கெடுத்து விடும். இத்தகைய கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் லைப்போசக்க்ஷன் (Liposuction) சிகிச்சைக்கு லேசர் கருவி பயன்பாடு ஓர் வரப்பிரசாதம்தான். சில ஆண்களுக்கு மார்பகம் பெருத்துக் காணப்படுவதுண்டு. இதனால் அவர்கள் பொது வெளியில் தலைகாட்டவே அச்சப்படுவார்கள்.

ஆண் மார்பக வீக்கம் (Gynecomastia) பாதிப்பை லேசர் உதவி கொண்டு குறைந்த வலியுடனும் போக்கிவிடலாம். பினைன் (benign) எனப்படும் தைராய்டு கட்டி பாதிப்பு கண்டறியப்பட்டால், அதை மைக்ரோவேவ் அப்லேஷன் கருவியின் துணையுடன் அல்ட்ரா சவுண்ட் கைடுலைன் மூலம் நீடில் செலுத்தி பிரச்னையைத் தீர்க்கலாம். இவ்வாறான சிகிச்சையில் ஒன்று முதல் ஒன்றரை மாதத்தில் அந்தக் கட்டி கரைந்து போய்விடும். கர்ப்பப்பை பாதிப்புக்குள்ளான (Uterine Fibroids) பெண்களுக்கு மிகுந்த ரத்தப் போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular period) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

பொதுவாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆபரேசன் மூலம் கர்ப்பப்பையை அகற்றுவதே தீர்வாக இருந்தது. ஆனால் மைக்ரோவேவ் அப்லேஷன் கருவி மூலம் சிகிச்சை பெறும்போது அது தேவையில்லை. அந்தக் கட்டியை மிகச் சிறியதாக மாற்றி பிரச்னைக்கு சிறந்த தீர்வைப் பெற்றிடலாம். பெண்களுக்கு ஏற்படும் ஃபைப்ரோடெனோமோ (FIBROA DENOMA) எனப்படும் மார்பகக் கட்டி  பாதிப்பையும் மைக்ரோவேவ் அப்லேஷன் கருவியால் அளிக்கப்படும் சிகிச்சை மூலம் மிகச்சிறந்த நிவாரணம் பெறலாம்.

இதே போன்று கல்லீரலில் ஏற்படும் புற்று நோய் சிகிச்சையிலும் மைக்ரோவேவ் அப்லேஷன் கருவியின் பயன்பாடு உன்னதமானது. இந்த சிகிச்சைகள் எல்லாமே ஒரே நாளில் செய்யக்கூடியதுதான். ஹண்டே மருத்துவமனையில் மேற்கண்ட சிகிச்சைகள் தவிர லேப்ராஸ்கோபிக் மூலம் பித்தப்பை(Gallbladder), கர்ப்பப்பை (Hysterectomy), குடல்வால் (Appendicectomy), வழுக்கைத் தலைப் பிரச்னைக்கு முடி மாற்று சிகிச்சை (Hair Transplant- FUE) என பல்வேறு பாதிப்புகளுக்கும் அறுவை சிகிச்சை மூலம் சிறந்த தீர்வைக் கொடுத்து வருகிறோம்’’ என்கிறார் மருத்துவர்.

மா.வினோத்குமார்