எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள்



நம் உடல் செல்களால் இயங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ஆரோக்கியமாக இயங்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். இது நம் உடலை பலதரப்பட்ட நோயில் இருந்து பாதுகாக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக ஏற்பட்டது. அந்த கொடிய தொற்று மட்டுமில்லாமல்... வேற எந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க இயற்கை பல வளத்தினை அளித்துள்ளது. அவற்றை நாம் உணவு மூலமாக எடுத்துக் கொள்வது அவசியம்.

காய்கறி, பழங்களை சாப்பிடாத குழந்தைகள் கூட சுவையான பானங்களை விரும்பி குடிப்பார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதனை ஜுசாகவோ, சூப்பாகவோ அல்லது மில்க்‌ ஷேக்காகவோ செய்து தரலாம் என்கிறார் சமையல் நிபுணர் மீனாட்சி. இவர் தோழியர்களுக்காக இந்த இதழில் ஆரோக்கிய பானங்களின் செய்முறை விளக்கம் அளித்துள்ளார்.

தேங்காய்  கசகசா பால்

தேவையானவை : துருவிய தேங்காய் - 1/2 கப், ஊற வைத்த கசகசா - 1 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் துண்டுகள் - 4.செய்முறை : தேங்காய் துருவல், ஊறிய கசகசா, பட்டை துண்டு, சர்க்கரை சேர்த்து, ஐஸ் சேர்த்து நைசாக அரைத்து, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான தேங்காய் கசகசா பால் தயார். மனச்சோர்வு நீக்கி, நல்ல தூக்கம் வரும்.





தொகுப்பு : ப்ரியா | படங்கள் : வே.ஸ்ரீதர்