வாசகர் பகுதி



முருங்கையின் மகத்துவம்

கிராமத்தில் எல்லாருடைய வீட்டு வாசலிலும் ஒரு முருங்கை மரம் இருப்பதைப் பார்க்கலாம். முருங்கை இலை மற்றும் காயில் பல மருத்துவ பலன்கள் உள்ளன. இது பெண்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. இதன் மகத்துவம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்

* முருங்கைக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம். இதனால் மூளை வளர்ச்சி அடையும். கண்பார்வை நன்கு தெரியும். சர்க்கரைச் சத்து குறையும்.

* முருங்கைக்கீரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ, முருங்கை ஈர்க்கு இவற்றைக் கொண்டு ரசம், சூப்பு வைத்துச் சாப்பிட்டால் நரம்புகளுக்கு வலு ஏற்படும். நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

* வயிற்றுப் பொருமல் உள்ள குழந்தைகளுக்கு முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து சாப்பிட கொடுத்தால் வயிற்றுப் பொருமல்
குணமாகும்.

* முருங்கைக் கீரையையும், பூவையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள தாது விருத்தியும், ரத்த சுத்தமும் ஏற்படும்.

* முருங்கைக் கீரையுடன் உப்பையும் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து இடுப்பில் தடவினால் இடுப்புப்பிடிப்பு விட்டுப்போகும்.

* முருங்கை இலைகளை உருவிய பின் எஞ்சி நிற்கும் ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர உடல் அசதி நீங்கி பலம் பெறும்.

* முருங்கைக் கீரைச் சாறு அரைக்கிண்ணம் எடுத்து, அதே அளவு நல்லெண்ணெயை அதனுடன் கலந்து ஒரே மூச்சில் குடித்தால் நாய்க்கடி விஷம் நீங்கும்.

- இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.