Festival makeup



நவராத்திரியில் ஆரம்பித்து பொங்கல் வரை இது பண்டிகை காலம். பண்டிகைகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து நெருங்குவதால் ஒவ்வொரு முறையும் அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களை எப்படி வீட்டில் அழகு படுத்தலாம் என்பதை அழகுக்கலை நிபுணர் ஹேமலதா படங்களுடன் விளக்குகிறார்.

எப்போதுமே தங்களை அழகாக வெளிப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு  ஆர்வம் அதிகம். அதுவே பண்டிகை காலங்கள் என்றால் அலங்காரத்தில் கவனம் சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனால் பண்டிகை நேர வேலைப்பளு, கூடவே வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் உபசரிப்பது என கஷ்டப்பட்டு தாங்கள் போட்ட மேக்கப் கலையாமலும் நீண்ட நேரம் இருக்க வேண்டும். இதோ சின்னச் சின்ன ஸ்டெப்பில் சூப்பராக, நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் மேக்கப் எப்படிப் போடுவது என்பதை நமக்காகச் செய்து காட்டுகிறார் ஹேமலதா.

டிப்ஸ் 1

குட்டீஸ்க்கு கன்சீலர், ஃபவுண்டேஷன் தேவையில்லை. ஐ ஷேடோ லிப்ஸ்டிக்கோடு நிறுத்தி, காம்பேக்ட் பயன்படுத்தலாம்.வயதானவர்களுக்கு கன்சீலருக்கு பதில் ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்தலாம். ஐ ஷேடோ தவிர்த்து, ஐ ப்ரோஸ் மற்றும் லைட் ஷேட் லிப்ஸ்டிக் போட்டால் போதுமானது.

டிப்ஸ் 2

* பட்ஜெட்டுக்கு ஏற்ற புராடக்ட்ஸ் சந்தைகளில் தாராளமாய் கிடைக்கிறது.
* வறண்ட சருமம் என்றால் க்ரீம் பேஸ், எண்ணெய் சருமம் என்றால் லிப்ஸ்டிக்கில் இருந்து அனைத்தையும் ஜெல் பேஸ் பயன்படுத்த லுக் சூப்பராகும்.

* ஆலுவேரா, அவக்கோடா இவற்றில் எதை வேண்டுமானாலும் மாய்ச்சரைசராகப் பயன்படுத்தலாம்.
* ப்ரைமர் பயன்படுத்தினால் ஸ்கின் சாஃப்ட்டாகும்.
* டோனர் பயன்படுத்த மேக்கப் நீண்ட நேரம் கலையாது.
* ஃபவுண்டேஷன் ஷைனிங் லுக் தரும்.
* கன்சீலர் இல்லாதவர்கள், ஸ்கின் கலரை விட இரண்டு ஸ்டெப் அதிகமுள்ள ஃபவுண்டேஷனை மிக்ஸ் செய்து டார்க் ஸ்பாட்ஸ், கருவளையம், தழும்பு உள்ள இடத்தில் டேப்பிங் செய்யவும்.
* விரும்பினால் லிப்லைனர் இல்லாமலும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம்.

மாடல்: இந்துமதி
மேக்கப் ஆர்டிஸ்ட்: ஹேமலதா
உதவி: விஜயலெட்சுமி, உஷாராணி


மகேஸ்வரி

ஜி.சிவக்குமார்