நைக் அறிமுகப்படுத்திய ‘XL’ ஆடைகள்



நியூஸ் பைட்ஸ்

நைக் ஸ்போர்ட்ஸ் ஆடை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளஸ் சைஸ் ஆடைகள், எடை அதிகமான பெண்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. லண்டனில் இருக்கும் நைக் ஷோரூம்களை இந்த பிளஸ் சைஸ் மாடல் பொம்மைகள் அலங்கரித்திருப்பது, அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஆடைகளில் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் உடைகள், பருமனானவர்களுக்கு பொருந்துவதில்லை. பருமனாக இருக்கும் பெண்கள் ஒல்லியாக வேண்டும் எனப் போராடுவதற்கான முக்கிய காரணமும் உடைகள்தான். ஆனால் நைக் நிறுவனம், யார் வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்த உடைகளை அணியலாம், பிடித்த விளையாட்டை ஆடலாம் என்பதை வழிமொழிகிறது.

பாலியல் தொல்லை கொடுத்து வந்தவரை புகார் செய்ததால், 56 பெண் ஊழியர்கள் பணி நீக்கம்?

ஹைதராபாத்தில் இயங்கி வரும் பிரபல  ஃபேஷன் கல்லூரி, நிஃப்ட். அதில் பணியாற்றிய 56 பணிப்பெண்கள், அங்கு வேலை செய்யும் ஸ்டெனோகிராபர் அளித்த பாலியல் தொல்லையை மேலிடத்தில் புகார் தெரிவித்ததால், பணியிலிருந்து விலகிச்செல்லுமாறு நிர்வாகம் கூறியதாக புகார் எழுந்துள்ளது.

குற்றம் செய்தவரை விடுத்து, பாதிக்கப்பட்டவரை ஒரு கல்லூரி ஏன் தண்டிக்கிறது என நிஃப்ட் மீது குற்றம் சாட்டியபின், பணியிலிருந்து நீக்கிய 56 பெண்களையும் மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது நிஃப்ட் கல்லூரி. பாலியல் புகாரில் சிக்கிய  ஸ்டெனோகிராபர் அதே பணியில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

ஸ்வேதா கண்ணன்