ப்ரியங்களுடன்



பூனாவைச் சேர்ந்த ‘பூனம் சொனுனே’ இத்தனை இளம் வயதில் பெரிதாக சாதித்திருக்கும் பாங்குப் பாராட்டத்தக்கது. எப்போதும் ‘வறுமை’யைக் காரணம்  காட்டுவதை விட உழைப்பை அடிப்படையாகக் கொண்டால் வானம்கூட வசப்படும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். வாழ்வென்ற பெருங்கனவை நனவாக்கிய ஆசிரியை, பள்ளி முதல்வர் சுதா சரவணன் ஒரு முன்மாதிரிப்  பாடம்.
- தி.பார்வதி, திருச்சி.

சாப்பாடு என்றால் சைடீஷ் இல்லாமலா... அதுவும் சுவையான துவையல் இணைப்பு புத்தகம் பலனும் பயனும் தந்து பல்சுவை ருசியை  அதீதப்படுத்தியது.
- கவிதா சரவணன், திருச்சி.

சர்வதேச திரைப்பட விருது, தேசிய விருதுகளை அள்ளிய ‘டூலெட்’ தயாரிப்பாளர் பிரேமா செழியனை பாராட்டியே ஆக வேண்டும். பொழுது  போக்குகளைத் தாண்டி, சமுதாய சிந்தனையுடன் திரைப்படம் எடுத்து, இயக்கி சாதனைப் படைத்த செழியன் குடும்பத்தினர் ஒரு தன்னம்பிக்கை  வழிகாட்டி என்றே சொல்லலாம்.
- அனிதா நரசிம்மராஜ், மதுரை.

படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காமல் எதிர்பாராமல் கிடைத்த வேலையைச் செய்து ஒரு ஆப்பிள்கூட தம் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்க  முடியாமல் கண்ணீர் வடித்த சிவசங்கரி இன்று ‘ஸ்கூட்டி’ வாங்கும் அளவுக்கு முன்னேறியிருப்பது பாராட்டுக்குரியது.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்.

கடைசி தேவதாசி தலைப்பிலான முத்துக்கண்ணம்மாவினைப் பற்றிய கட்டுரை அன்றைய தேவதாசி முறையினைப் பற்றிய கட்டுரையாகவே  இருந்தது. மேலும் கண்ணம்மாவை ஒரு தாயாகவே பார்த்திட வைத்தது.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

செல்லுலாய்ட் பெண்கள் வரிசையில் நடிகை சுகுமாரி கடைசி வரை நடித்த படங்களின் பட்டியலை படித்து முடித்ததும் ஃபிரிட்ஜ் திறந்து ஐஸ்  வாட்டரை மடக் மடக்கென குடித்து ‘அம்மாடி’ என உட்கார்ந்தேன்.
- சுகந்தி நாராயணன், வியாசர் காலனி.

பரதக்கலையில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளதா..? வியக்க வைத்தது. ஒரு கலையைப்பற்றி ஒரு கலைஞருக்கு மட்டுமே தெரிந்தால்  போதாதுனு நினைக்கும் இவர் சரியாக செயல்பட்டிருக்கிறார். தொடரட்டும் பணி. வாழ்த்துகள் வித்யா பவானி.
- திருமதி.ராஜி குருசாமி, சென்னை.