ப்ரியங்களுடன்..
காதலர் தினத்தன்று அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ‘தீரா புன்னகை’ ராஜேஷ்- திவ்யா அவர்களின் காதல் கல்யாணம் வெளியிட்டது ரியலி தி கிரேட்...
- வண்ணை கணேசன், சென்னை.

 கான்டி னென்டல் சைனீஸ் உணவுகள் புத்தகம் ரசித்து சமைத்து ருசித்து சாப்பிட்ட உணர்வை ஊட்டின. அன்பை வெளிப்படுத்தி பாசத்துடன் பண்பை ஊட்டி குழந்தைகளை ஊக்கப்படுத்தும் மகிமாவின் சேவை மகத்தானது.
- அனிதா நரசிம்மராஜ், மதுரை.

எதற்கு எடுத்தாலும் வெளிநாட்டை உதாரணம் காண்பிக்கும் நம் அரசு பின்லாந்து நாட்டில் உள்ள கல்வியை நம் நாட்டில் கொண்டு வந்து புரட்சி செய்தது சிறப்பு.
- திருச்சிற்றம்பலம் சுரேஷ், மதுரை.

வல்லமை தாராயோ புதிய தொடரில் 104 வயது மூதாட்டியின் தன்னம்பிக்கை பாதையை முதல் தொடராக வெளியிட்டு, அசத்திவிட்டீர். தொடரட்டும் இந்த பணி.
- வத்சலா சதாசிவன், சென்னை.

இந்தியாவின் இளவரசி என்ற தலைப்பில் பிரியங்கா காந்தி கட்டுரையையும், படங்களையும் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்! அவரது வருகையை மனமார வரவேற்போம்.
- சிவானந்தம், லால்குடி.

பெருமூளை வாதம் என்ற பிரச்சனைக்குரியவரின் அறியப்படாத வாழ்க்கையை பேரன்பு படத்தில் முதல் முதலாக பார்த்த போதும், அதன் தீர்வுகள் குறித்தும் முரண்பட்ட விமர்சனங்கள் எழுவது இயல்பே. அதற்கு விளக்கம் தருவது போல அமைந்தது இயக்குனர் ராம் நேர்காணல்.
- அன்பழகன், அந்தணப்பேட்டை.

கேரள மாநிலத்தில் இயங்கி வரும் ஆளில்லா மளிகைக்கடை பற்றிய அரிய தகவல். மனித நேயத்தின் மாண்பையும் மகத்துவத்தையும் உணர்த்தியது...
- இராஜேஸ்வரி, தேனி.

செல்லுலாய்ட் பெண்கள் வரிசையில் திரை உலகில் நடிகர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அம்மாவாக விளங்கிய அன்னை எஸ்.என்.லட்சுமி பற்றிய செய்திகள் தோழி தந்த வரலாறு தான். திரை உலகம் அவர் நடித்த படங்களை மறந்திருந்தாலும் 94 படங்களை பட்டியலிட்டு காட்டிய தோழியின் நன்றி கணக்கை எண்ணி வியந்தேன்.
- தியாகசந்தன், திருச்சி.

அட்டையில்: லாவல்யா  படம்: ஆண்டன்தாஸ்  மேக்கப்: ராதா  
நகை உதவி: நியு ஐடியாஸ் ஜுவல்லரி  உடை உதவி: ஜே2 பேஷன்