கிச்சன் டிப்ஸ்



* மிக்சி ஜாடியிலுள்ள பிளேடு இறுகி சுழற்ற கடினமாக இருந்தால், கவலை வேண்டாம் ஜாடியின் பிளேடு மூழ்கும் அளவு வெந்நீரை ஊற்றி சிறிது  நேரம் கழித்து சுழற்றினால் சுலபமாக வரும்.
- ஹேமலதா, தஞ்சை.

* சமையல் அறையில் ஆங்காங்கு வசம்பை நறுக்கிப் போட்டால் பூச்சிகள் தொல்லை இருக்காது.
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

* ரொட்டியில் பஜ்ஜி தயாரிக்கும்போது ரொட்டியின் இருபக்கம் தயிரை பூசிவிட்டு மாவில் முக்கி எண்ணெயில் போடுங்கள். இவ்வாறு செய்தால்  எண்ணெய் அதிகம் செலவாகாது.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* வாணலியில் நெய் சேர்த்து, சீரகம், கிராம்பு, ஏலக்காய்  சேர்த்து தாளித்து, பிரிஞ்சி இலை, முந்திரி, திராட்சை வறுத்த பின் குடைமிளகாய்,  வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் அன்னாசி பழச்சாறு சேர்த்து கிரேவி பதத்துக்கு வந்ததும் உதிராக வடித்த  பாஸ்மதி அரிசி சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும். ‘பைன் ஆப்பிள் குடைமிளகாய் புலாவ்’ அனைவரையும் ஈர்க்கும்.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

* புட்டிற்கு மாவு பிசையும் போது சிறிதளவு பீட்ரூட்டை துருவி சேருங்கள். புட்டின் சுவை அதிகரிக்கும்.
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

* சேமியா பாயசம் செய்யும்போது குழைந்துவிட்டால் எலுமிச்சம்பழத்தை ரெண்டு சொட்டு பிழிந்துவிட்டால், சேமியா தனித்தனியாகி விடும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

* பாகற்காய் பொரியல் செய்யும்பொழுது கேரட், வெங்காயம் துருவிப் போட்டு நிறைய கறிவேப்பிலை சேர்த்தால் கசப்பே தெரியாது.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* ரவா கேசரி செய்ய சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-19.

* ரவா இட்லி செய்யும்போது, சிறிது சேமி யாவை வறுத்து, ரவையுடன் தயிரில் ஊற வைத்து செய்தால் ருசியாக இருக்கும்.
- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.