தனித்துவமிக்க தாமரைவாசகர் பகுதி

தாமரை ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும்  மருத்துவத்தில் வெண்தாமரை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரை குடிநீர் மிகவும் ஏற்றது.

மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து வெண்தாமரை பூ கஷாயம் குடித்து வந்தால், மூளை வளர்ச்சி அடையும்.இதயம் தொடர்புடைய  எண்ணற்ற நோய்களைப் போக்க, வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட குணமாகும்.வெண்தாமரைப் பூக்களைக் காய வைத்துப் பொடியாக்கி  வைத்து, தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்துச் சுண்டக் காய்ச்ச வேண்டும். அதை வடிகட்டி பால்,  சர்க்கரை சேர்த்து தினமும் இருமுறை குடித்தால், மன பரபரப்புச் சீராகும்.

- சு.இலக்குமணசுவாமி,மதுரை.