கல்விக் கண்திறப்பதழகு

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலைமாறி, இன்றைய காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் பெருமளவில்  பங்களித்து வருகின்றனர். ஏனெனில், ஒரு பெண் படித்து வேலையில் அமர்ந்துவிட்டால் அந்தக் குடும்பம் அறிவிலும், பொருளாதாரத்திலும்  முன்னேறிவிடும். பெண்கள் முன்னேற்றத்தை மையமாக வைத்து சென்னை அண்ணாநகரில் இன்ஃபோசல் என ஓர் அகாடெமி ஆரம்பித்து  வழிகாட்டி வருகிறார் சாந்தி. இயக்குநராக இருந்து செயல்பட்டு வரும் சாந்தியிடம் பேசியபோது, அதற்கான காரணம் மற்றும்  வழிகாட்டுதல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  

‘‘ஓர் ஆண் பெறும் கல்வி அவனை மட்டும் வாழவைக்கும். ஆனால், ஒரு பெண் பெறும் கல்வி அவளின் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும்  வாழவைக்கும் என்பது மிகவும் சரியானதுதான். ஆனால், படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால்தானே இது சாத்தியம்..!!!  என்ன  படித்தாலும் வேலை இல்லையெனில் இங்கு வேலை கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அப்படியே கிடைத்தாலும் நிறைவான ஊதியம்  கிடைப்பதில்லை. எதற்காக காலத்தையும், நேரத்தையும், பணத்தையும் வீணாக்க வேண்டும் என எண்ணியபோது உலகளவில் எங்கே  அதிகமான வேலைவாய்ப்புடன் கூடிய கல்வி உள்ளது என ஆராய்ந்து பார்த்தேன்.

அப்போது, என் கண்ணில் பட்டது ஆஸ்திரேலியா.வளர்ந்த நாடான ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு அதிகமுள்ளது. அதற்கு  தேவையான  படிப்புகளான தகவல் தொழில்நுட்பம், தகவல்தொடர்பு தொழில்நுட்பம், காமர்ஸ், மேனேஜ்மென்ட், ஹெல்த் சயின்ஸ்  போன்றவற்றை தேர்ந்தெடுத்து உலகத்தரமான கல்வியை  உலகின் நட்சத்திர பல்கலைக்கழகங்கள் மூலமாக வழங்க முடிவெடுத்தேன்.  அதன்படி இன்று 100க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்துள்ளேன். அதனால், படித்து முடித்தவுடன் வேலைவாங்கிக்  கொடுப்பதுடன், படிக்கும்போதும் பகுதிநேர வேலைவாய்ப்பை வழங்கி பணச்செலவு இல்லாமல் மாணவிகளுக்கு படிப்பை  எளிதாக்கியுள்ளேன்.

ஆஸ்திரேலிய கல்வியையும் வேலைவாய்ப்பையும் நம் தமிழக மாணவிகளுக்கு எளிதாக கொடுக்கும் பொருட்டு இதனைச்  செய்துவருகிறேன். மாணவிகளுக்கு எல்லா வருடங்களும் நிறைய  ஸ்காலர்ஷிப் வழங்குகிறோம்.  நன்கு படிக்கும் மாணவிகளுக்கு  ஆஸ்திரேலியாவில்   100  சதவீதம் ஸ்காலர்ஷிப் கொடுத்து ஒட்டுமொத்த படிப்பு செலவையும் தள்ளுபடி செய்து இலவசமாக படிக்க  செய்கிறோம். இப்படி படிக்கும் மாணவிகள் பகுதிநேர வேலைவாய்ப்பில் கிடைக்கும் வருமானத்தின் பெரும் பகுதியை பெற்றோர்களுக்கு  அனுப்பி வைக்க முடியும்.  

மாணவிகளின் படிப்பு, படித்து முடித்தவுடன் வேலை, குடியுரிமை, மேற்படிப்பு, வாழ்க்கை என அனைத்து நிலைகளிலும் ஒரு பெற்றோர்  நிலையில் இருந்து எப்படியெல்லாம் வழிகாட்ட முடியுமோ அதனைச் செய்துவருகிறேன். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவிகள்கூட இந்த  வாய்ப்பை பயன்படுத்தி படிப்பதன் மூலம் நன்கு படிக்கும் தங்களது வகுப்பு தோழிகளைக்காட்டிலும் வாழ்க்கையில் முந்தி சென்று  உயர்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது.

உலகில் வளமான நாடுகள் பல இருக்கும்போது, ஆஸ்திரேலிய படிப்பையும் ஆஸ்திரேலிய வேலைவாய்ப்பையும் எதற்காக தேர்வு  செய்திருக்கிறேன் என்றால், பிற நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவின் சீதோஷ்ண நிலை நம் இந்தியர்களுக்கு உகந்ததாக  இருக்கிறது. ஆஸ்திரேலிய விசா கிடைப்பதும் எளிதாக இருக்கிறது. இந்தியாவைவிட இரண்டரை மடங்கு நிலப்பரப்பைக்  கொண்டிருந்தாலும் மக்கள்தொகை நமது சென்னையின் 2.25 கோடிகளை கொண்டுள்ளதால் அதிவேக பொருளாதார வளர்ச்சியில்  வேலைவாய்ப்பு மிக  அதிகமாக உள்ளது.

உலக  நிறுவனங்களால்  அங்கீகரிக்கப்பட்ட மதிப்பு மிகுந்த கல்வித் திட்டத்தை எந்தவித சமரசத்திற்கும் உட்படாது செயல்படுத்தும்  உலகத்தரமான பல்கலைக்கழகங்கள் பல உள்ளன.  மேலும், ஆஸ்திரேலியா நிலையான மிகவும் வலுவான சமூக, அரசியல், பொருளாதார  அமைப்பைக் கொண்டுள்ள  நாடு.  பன்னாட்டு கலாச்சாரத்தை உள்ளடக்கிய  நட்பும் சகோதரத்துவமும் நிறைந்த மக்களைக் கொண்டுள்ள  நாடு. மாசற்ற  காற்றும்  அளவற்ற நீர் வளமும் பயன்படுத்தப்படாத சக்தி நிறைந்த நிலமும் வளமான காடும் கண்கொள்ளா அழகுடன்  கடவுளின் இயற்கையும் மனித ஆற்றலும் இணைந்து கட்டமைக்கப்பட்டுள்ள  சொர்க்க பூமியாக இருக்கிறது.

இந்திய மாணவிகளுக்கு ஆஸ்திரேலிய கல்வியும் வாழ்வும் கிடைப்பது மிகப்பெரிய வரம். ஆஸ்திரேலிய படிப்பு அதிக செலவாகுமோ என்று  தயங்கி ஒதுங்காது வரும் பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறேன். இதுவரை 5000க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து  பயனடைந்துள்ளனர்.  குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக மாணவ, மாணவிகள் சேர்ந்து  பயனடைகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி படித்து பயன்பெற வேண்டும் என்பதே எனது முழு  விருப்பம்’’ என்றார் நிறைவாக.  

-மீனாட்சி