டிப்ஸ்… டிப்ஸ்…



*    குளிக்கும் முன், ஷாம்பூவில் கொஞ்சம் சர்க்கரை கலந்து, தலை ரோமத்தின் அடியில் தடவி, பிறகு அலசினால், இறந்து மற்றும்  மயிர்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ரோமங்களும் அடியோடு வந்துவிடும்.

*    விழுந்த பற்களை, சில நாடுகளில் குழந்தைகள் தங்கள் தலையணைக்கு அடியில் வைத்து விடுவர். இப்படி வைத்தால் அதிர்ஷ்ட தேவதை  அவற்றை எடுத்துக்கொண்டு பதிலுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தித் தருவார் என்ற நம்பிக்கை. ஆனால் கிரேக்க நாட்டின் குழந்தைகள், தங்கள் வீட்டின்  மேற்கூரையில் போட்டு விடுவர். இதனால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

*    சமைக்க உதவும் எண்ணெயை வாயில் ஊற்றி, நன்றாக கொப்புளித்தால், பற்களின் கறைகள் நீங்கி, பளிச்சென ஜொலிக்கும்.

*    காலையில் நீர் ஆகாரம் சாப்பிட விரும்பினால் அதற்கு சிறந்தது இளநீர். இதில் எலெக்ட்ராலைட்ஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளது.  அத்துடன் இயற்கை சர்க்கரையும் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் வயிற்றுக்கும் நல்லது.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

ஓமம் மருத்துவக் குணங்கள்!

*    ஓமத்தில் கொஞ்சம் உப்பு கலந்து பொடி செய்து சூரணமாக உட்கொள்ள அஜீரணம் நீங்கும் அல்லது ஓமத்தை உமி நீக்கி அரைத்து  பசும்பாலில் கலக்கிக் குடிக்க செரியாமை, மந்தம், மாந்தம் நீங்கும்.

*    ஆஸ்துமா தொல்லை உள்ளவர்கள் தினமும் காலை, மாலை ஓம ரசம் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

*    தலையில் நீர் கோர்த்து அவதிப்படுபவர்கள் ஓமத்தை விழுதாக அரைத்து அந்தப் பசையை தலையில் தேய்த்து ஊறிய பின்னர் தலையில்  நீர் விட்டுக் கொண்டால் நீர் கோர்த்துக் கொள்ளாது.

*    ஜலதோசத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிறிதளவு ஓமத்தை எடுத்து துணியில் முடிந்து உறிஞ்சினால் மூச்சுத் திணறலும்,  தலைவலியும் நீங்கும்.

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.