நூதனப் பறவை... நூதன அழைப்பு!வாசகர் பகுதி

படத்தில் நீங்கள் காணும் நூதனப் பறவையின் பெயர் ‘லெபோரினா- நீயிட்டா’. இதில் ஆண் பறவைகளுக்கு பெண் பறவைகள் கிடைப்பது கஷ்டம். இது நீயூகயானா மற்றும் இந்தோனேஷியாவின் மழை காடுகள் மற்றும் மழை காடுகளை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே காணப்படும் பறவை. மயிலைப்  போன்ற வாழ்க்கையை கொண்டது.

பெண் மயிலை திருப்திப்படுத்த ஆண் மயில் கூக்குரலிட்டு, தோகைகளை விரித்து டான்ஸ் ஆடி கவர்ந்து இழுக்கும்  என கேள்விப்பட்டுள்ளோம். இதே போன்று இந்த பறவையும், பெண் பறவையை கவர சப்தமிட்டு தன் கருந்தோகையை விரித்து (அப்போது பார்த்தால் எலிப்ஸ் (Ellipse), நீள்  விட்டம் போல இருக்குமாம்) ஆடுவதுடன், தோகையின் முனையால் பெண் பறவையை தீண்டி அழைக்குமாம். ஆனால் பெண் பறவையோ இப்படி 15- 20 ஆண் பறவைகள் முயற்சிக்கும்போது ஒன்றிடம் ஆசைப்பட்டு சம்மதிக்குமாம்.

- வைஷ்ணவி, பெங்களூரு.