தெர்மாஸ் பிளாஸ்க் பராமரிப்பு*    பிளாஸ்குகளைப் பயன்படுத்தாதபோது அதில் சிறிது சர்க்கரை போட்டு வைத்திருந்தால் நாற்றம் வராது.
*    பிளாஸ்குகள் பயன்படுத்தாதபோது திறந்தே வைக்க வேண்டும். மூடி வைத்தால் வாடை அடிக்கும்.

*    பிளாஸ்கில் குளிர்பானங்கள் ஊற்றும் முன்பு குளிர்ந்த நீரிலும், சூடான பானங்கள் ஊற்றுவதற்கு முன்பு சுடுநீரிலும் கழுவ வேண்டும்.  பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும்.
*    சூடு வெகு நேரம் ஆறாமல் இருக்க பிளாஸ்க் நிறைய சூடான பானத்தை ஊற்ற வேண்டும்.
*    பிளாஸ்கில் வாஷரை அடிக்கடி மாற்றுவதன் மூலம் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.
*    ஒவ்வொரு முறையும் பிளாஸ்கைப் பயன்
படுத்தும் முன்பு வாஷர் ரீபிலை வெளியே
எடுத்துக் கழுவி சுத்தப்படுத்தினால் நல்லது.
*    ரீபிலை சுத்தம் செய்ய மிருதுவான துணி, ஸ்பான்ச் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
*    நீர்க்குழாயிலிருந்து நேரடியாக பிளாஸ்கில் தண்ணீர் விழும்படி கழுவக் கூடாது. பலமாகக் குலுக்கவும் கூடாது.
*    பேப்பர் துண்டுகளை பிளாஸ்க் உள்ளே போட்டு தண்ணீர் விட்டுக் குலுக்கிக் கழுவினால் உள்பகுதி நன்றாகச் சுத்தமாகும்.
*    பிளாஸ்கில் ஐஸ் வைப்பதென்றால் தூளாக்கிவிட்டு சாய்வாக வைத்து நிரப்ப வேண்டும்.
*    சூடான காபியோ, டீயோ பிளாஸ்கில் ஊற்றும்போது சர்க்கரை சேர்க்காமல் குடிக்கும்போது சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்த  பானம் ஊற்றினால் பால் திரிந்துவிட வாய்ப்புண்டு.
*    திட உணவுப் பொருட்களை பிளாஸ்கில் வைத்திருந்தால் பயன்படுத்தியதும் உடனே சுடுநீரை உள்ளே விட்டு பிறகுதான் கழுவி சுத்தம்  செய்ய வேண்டும்.
*    பிளாஸ்கை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். தவறி கீழே விழுந்து விட்டால் உடைந்துவிட வாய்ப்புண்டு.
*    பிளாஸ்கில் ஊற்றும் பானம் அதிக சூடாகவோ அதிக குளிரானதாகவோ இருந்தால்தான் அதே வெப்பம் அல்லது குளிர்ந்த நிலையில்  பானத்தை நீண்ட நேரம் வைக்க முடியும்.

- ஆர்.ஜெயலட்சுமி,
திருநெல்வேலி.