பிள்ளைகளை விளையாட விடுங்க



இன்றைய நிலையில் படித்தால்தான் நல்ல நிலைமைக்கு வரமுடியும் என்ற சூழலை குழந்தைகள் மனதில் விதைத்துள்ளதால், வீட்டிற்குள்ளும் வெளியிலும் விளையாட முடியாமல் அவர்கள் கைகால்கள் கட்டிப்போடப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறது. வளர்ந்த பின்னர் ஒரு சிறு பிரச்னையைக்கூட சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறுகிறார்கள் என எச்சரிக்கிறார் மனநல நிபுணர் வந்தனா.

“குழந்தைகள் என்றாலே நமக்கு முதலில் அவர்களின் சிரிப்பு, குறும்புத்தனம்தான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகளின் உடலையும், மனத்தையும் சீராக வைத்திருக்க விளையாட்டு மிகவும் முக்கியம். குழந்தை களின் மூளை 5 வயதுக்குள் சராசரியாக 90% வளர்ச்சி பெறுகிறது. இதனால் எந்த நேரத்திலும் அவர்கள் சுறுசுறுப் பாக இருப்பார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர் களும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடுவார்கள். ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும்போல் இருக்கிறது. ஏனென்றால் இன் றைய தலைமுறை யினருக்கு விளை யாட்டு என் றாலே அது ஆங்கிரிபேர்டு, வீடியோ கேம்ஸ், பிற ஊடக  கேட்ஜெட்டுகள் மற்றும் கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது.

அந்த அளவிற்கு இணையதளத்தின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மறைந்து கொண்டிருக்கும் பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் அநேக நன்மைகள் உள்ளன என்பது இன்றைய மக்களுக்குத் தெரிவது இல்லை. இன்றைக்கு தொலைக் காட்சிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வீட்டுப் பாடங்களை திணிப்பதாலும், விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது. இன்றைக்கு குழந்தைகளுக்கு சுதந்திரமாக விளையாட இடம் இல்லை.

விளையாட்டு மைதானத் தோடு பள்ளிகளை உருவாக்க போதுமான இடம் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் விளையாட்டு மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந் தைகளுடன் முழுமையாய் ஈடுபடுவதற்கும், பிணைப் பதற்கும், குழந்தைகளின் கன்ணோட்டத்தில் இருந்து உலகத்தைப் பார்க்கவும் விளையாட்டு மிகவும் முக்கியமானது.

குழந்தைப் பருவத்தில் விளையாட்டுகள் மூலம்  சமூகத்தில் உரையாடல், உணர்ச்சிகளை வெளிப் படுத்தவும் மற்றவர்களுடன் ஒத்துழைக்கவும், சவால் களை சமாளிக்கவும் கற்றுக்கொள்ளலாம். அறிவாற்றல் கிடைக்கும். இணையதள விளையாட்டுகளான வீடியோ கேம்ஸ் மற்றும் பிற சமூக ஊடகங்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் சகிப்புத்தன்மை, குறிக்கோள் வைத்துக் கொண்டு செயல்படுவது மற்றும் தோல்வியை ஏற்றுக்கொண்டு அடுத்த தடவை முயற்சி செய்து

வெற்றி இலக்கை நிர்ணயிப்பது, இப்படி பல நன்மைகள் காணாமல் போகிறது என கண்டறியப் பட்டுள்ளது. ஆனால் இன்றைய கால பெற்றோர்கள் தங்கள் 2 வயது குழந்தை கையாளும் கேட்ஜெட்டுகளை காணும் போது பெருமிதம் கொள்கிறார்கள். இவை குழந்தைகளின் பேச்சு தாமதங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதுமாதிரியான கேட்ஜெட்டுகளால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக பிரச்னைகள் வருகிறது உதாரணமாக அமைதியின்மை, தூக்கத் தொந்தரவுகள்,  எப் பொழுதும் துறுதுறுவென இருப்பது மற்றும் கல்விச் சிக்கல்கள், சமூக உறவுகளின் தாக்கம், உடல் நலக்குறைபாடு, அதிக எடை இழப்பு, ஊட்டச்சத்து குறைவு, மனநிலையில் மாற்றங்கள், பணம் பெற பொய் மற்றும் சட்ட விரோதமான செயல்களை செய்தல் போன்ற உளவியல் ரீதியாக பிரச்னைகள் வருகிறது.

நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அன்றைய நமது பாரம்பரிய விளையாட்டுகள் பெரிதும் உதவின. வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை மற்றும் வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று. ஆடுபுலி ஆட்டம், கபடி, ஜல்லிக்கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கள்ளன் போலீஸ், பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி, கண்ணாமூச்சி, பூசணிக்காய், குலை குலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, கிச்சுக்கிச்சுத் தாம்பாளம், கொழுக்கட்டை, ராஜா மந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் ரெடி, மெல்ல வந்து மெல்லப்போ போன்ற விளையாட்டுகள் இப்போது இல்லை.

நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுகள் விளையாடப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தப் பாரம்பரிய விளையாட்டுகளில் தற்போது சரிவு இருப்பதாக ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இவை அனைத்தும் குழந்தைகளின் சிறிய மற்றும் பெரிய மூட்டுகளின் திறன்களை மேம்படுத்துகிறது.

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் மற்றும் கற்பனை திறமைகளை வளர்க்கவும் உதவுகிறது. இவ்வாறு விளையாடும் போது புதிய இடங்களுக்கு செல்லவும், நண்பர்களுடனான ஒத்துழைப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர். இவை பெரும்பாலும் முகம் பார்த்து முகம் பேசுவதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

சமூக திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடினால் அவர்களுடன் அதிக நேரம் செலவிடவும் மற்றும் அவர்களுக்குள்ளான பந்தத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் குழந்தைகள் தங்கள் சந்தோஷமான மற்றும் கஷ்டமான தருணங்களை தங்கள் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதைத் தவிர நமது பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம்  நம்பிக்கை அதிகரிக்கும், நினைவாற்றலை மேம்படுத்துகிறது, உடல் பருமன் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றைக் குறைக்கிறது, குழுவாக வேலை செய்யக் கற்றுக்கொடுக்கிறது. சோர்வு குறைகிறது மற்றும் நிர்வகிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது”.

- தோ.திருத்துவராஜ்