நோய்களை விரட்டும் ஓமம்



* தாவர குடும்பத்தைச் சேர்ந்த ஓமம் மிகுந்த மணமுடையது.
* ஓமத்தில் விட்டமின் பி 1, 2, 3 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன.
* ஓமம் அஜீரணச் சத்தைப் போக்கும் சிறந்த மருந்து.
* ஓம எண்ணையுடன் லவங்க எண்ணெயைச் சேர்த்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் போகும்.

* ஓம எண்ணையை தடவினால் மூட்டுவலி அறவே குறையும்.
* ஓம நீரைக் காய்ச்சி குடித்து வந்தால், கை, கால் நடுக்கம் குணமாகும்.நல்லெண்ணெயுடன் பூண்டும்  ஓமமும் சேர்த்துக் காய்ச்சி காதில் விட்டால் காதுவலி குறையும்.
* ஓமம் நச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
* ஓமத்தைப் பொடி செய்து கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் இதயம் பலப்படும்.
* ஓம நீரில் ஆவி பிடித்து வந்தால் மூக்கடைப்பும், தலைபாரமும் நீங்கும்.
* ஓமத்தை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் மார்பு வலி குறையும்.
* ஓமம் ஒரு சிறந்த கிருமி நாசினி.

- சு.இலக்குமணசுவாமி, மதுரை.