என்ன வாங்கலாம்? எப்படி வாங்கலாம்?



என்ன மக்களே... தீபாவளி போனஸ் கைக்கு வந்தாச்சா? இல்லை வரப்போகுதா? தீபாவளி  ஷாப்பிங்குக்கு தயாராகி விட்டீர்களா? என்ன வாங்கறது? எப்படி வாங்கறது? தீபாவளிக்கு புதுசா என்ன மாதிரியான புது விதமான உடைகள், புது டிசைன் நகைகள்  வந்திருக்கிறது என்று குழப்பமா இருக்கா? உங்களுக்கான தீபாவளி ஷாப்பிங் கைடு இதோ… பார்த்து வாங்குங்க, தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க.

பிரசாந்தி சில்க்ஸ்
வழக்கமான  மாடல்களில் இல்லாமல் இந்த தீபாவளிக்கு, சில்க் காட்டன்களில் புதுமையாக  வடிவமைக்கப்பட்ட ஹரிக்டம் என்னும் கலெக்‌ஷன் கண்களை கவரும் வண்ணம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் லைட் வெயிட் சில்க் காட்டன், செல்ஃப் டிசைன்ஸ் மாடர்ன் புடவைகள் இளம் பெண்கள் விரும்பும் வகையில் கிடைக்கிறது. ரெடிமேட் குர்திஸில் நியூ மாடல்கள் இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்
பட்டிருக்கிறது. சில்க் காட்டன் புடவைகளில்  வித்தியாசமான டிசைன்களில் கர்ட் ஸ்டைல், கலம்காரி போன்ற லேட்டஸ்ட் டிசைன்கள்  ஏராளம். பெண் குழந்தைகளுக்கான பாவாடை சட்டைகளில் கலம்காரி மாடல் சில்க்  டிசைன்ஸ் ஒரு வயது முதல் 8 வயது வரை கிடைக்கிறது.  

ஆர்தா சில்க்ஸ்
சில்க்  டிசைனர் புடவைகள், ஹேண்ட்லூம் காட்டன், ஷார்ட் சில்க்ஸ் புடவைகள் போன்றவை இந்த தீபாவளியின் புது வரவு. அது மட்டுமின்றி ஆடை வடிவமைப்பாளர்களிடம்  கொடுத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலர்ஃபுல் பொட்டிக் மாடல் புடவைகளும்  பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. காட்டன், சில்க் மற்றும் பல விதமான  ரகங்கள் கலந்த வித்தியாசமான புடவைகள் கண்களை கவரும் வண்ணங்களில்  வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்டர் டிசைன்ஸ் புடவைகள் வழக்கம்போல் இல்லாமல்,  வேறெங்கும் கிடைக்காத புது டிசைன்களிலும் தென்னிந்திய கலாசாரத்தை  நினைவூட்டும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

சுந்தரி சில்க்ஸ்
பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் 1860ம் ஆண்டு வெளிவந்த பாக்கு நிற சேலைகளை தற்போது புது வடிவில் வித்தியாசமான டிசைன்களில் தயார் செய்துள்ளது சுந்தரி சில்க்ஸ். கிராமத்து கை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட புடவைகள்தான் இந்த தீபாவளிக்கு புது வரவு. பட்டு நூலினால் வடிவமைத்து சில்வர், கோல்டு முத்துக்கள் பதித்த செட்டிநாடு சேலைகள் கண்களை கவரும் கலர்களில் கிடைக்கிறது.

டிக்கெட் பார்டர் மற்றும் டேப் பார்டர் என்று அழைக்கப்படும் பழமையான டிசைனை தற்போது புது வடிவில் மீனா பார்டராக கல்பவிருட்சகம் வடிவில் வடிவமைத்துள்ளது. மேலும் இண்டிகோ மாடல் சேலைகள் உள்ளன. முதன் முறையாக ரிப் டிசைன் சேலைகள் இந்த தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பாலும் பழமும் என்று சொல்லக்கூடிய பழமை வாய்ந்த சேலைகள் தற்போது உள்ள டிரண்டிற்கு ஏற்றவாறு நியூ மாடலில் இங்கு கிடைக்கிறது.

சென்னை சில்க்ஸ்
மங்கையருக்கான லினன், பட்டுச் சேலைகள், சாம்பா பட்டுச் சேலைகள், பைலு பட்டுச் சேலைகள்,  ஆர்கன்ஸா, பியூர் சில்வர் ஜரி பட்டுச் சேலைகள், விபாஞ்சி ஜூப்லி பட்டுச்  சேலைகள், ட்ரிபிள் கே சல்வார், சிறுவர், சிறுமியருக்கான ரியோ டிஷர்ட் மற்றும் ஸ்கூபா ப்ராக், மிடி வெஸ்டர்ன் போன்றவை தீபாவளியை ஒட்டி சென்னை சில்க்ஸின் புதிய வருகைகள். மேலும் டீனேஜ் பெண்களுக்கான க்யாரா குர்தி, ஆடவருக்கான மிஸ்டிக் கலெக்‌ஷன்ஸ் போன்றவை இந்த தீபாவளியின் புது  வரவுகள்.

ராம்ராஜ்
காட்டன் கரா வேஷ்டிகள் இந்த தீபாவளிக்கு புதிதாக அறிமுகமாகியுள்ளன. பொதுவாகவே வேஷ்டிகளில் பாலிஸ்டர் பார்டர் இருக்கும் காட்டன் கரா வேஷ்டிகளில் காட்டன் பார்டர்கள் வண்ண வண்ண நிறங்களில் கிடைக்கிறது. இவை முழுக்க முழுக்க கைகளால் நெய்யப்பட்டவையாகும். லிட்டில் ஸ்டார் என்று இந்த தீபாவளிக்கு 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குர்தா மற்றும் பஞ்சவர்ண வேஷ்டிகள் கலக்கல் டிசைன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான தொட்டில் வேஷ்டிகள் கிடைக்கிறது.

இந்த வருடம் கோயில் வேஷ்டிகள் பாரம்பரிய வண்ணங்களில் கிடைக்கிறது. வண்ண வண்ண நிறங்களில் காட்டன் சட்டைகள் இந்த தீபாவளியை சிறப்பிக்கிறது. DNxt சட்டைகள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன, முதன்முறையாக காட்டன் குர்தாக்கள் பல வண்ணங்களில் இந்த தீபாவளிக்கு புதுசு. பெண்களுக்கென்று காட்டன் கேரள சேலைகள் புதிய பொலிவுடன் புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

S Studio
பெரிய பெரிய மால்களில் கிடைக்கும் பிரத்யேக டிசைன்கள் எல்லாம் ஒரு சின்ன பொட்டிக்கிள் கிடைக்கிறதென்றால் அபூர்வம்தானே? சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் அளவுக்கு ஏற்றவாறு கிடைப்பதும் ஒரு வகை குதூகலத்தை மனதில் உண்டாக்கும் விஷயம்தான். மிகவும் நுணுக்கமான டிசைன்களை நேர்த்தியாக தருகிறது எஸ்.ஸ்டுடியோ. கட் ஒர்க், எம்பிராய்டரி, கலம்காரி ஒர்க் போன்றவை சில்க் சேலை மற்றும் சாஃப்ட் சில்க் சேலைகளில் செய்யப்படுகிறது.  ஹாப் அண்ட் ஹாப் சாரீ, பிளாக் பிரின்ட் சாரீ என இவையெல்லாம் எஸ்.ஸ்டுடியோவின் ஸ்பெஷாலிட்டி. 

சிம்பிள் டிசைன்ஸ் விரும்புவோருக்கு சிம்பிள் காட்டன் அல்லது சில்க் காட்டன் சாரீகளில் பிளாக் ஒர்க் செய்து, கலம்காரி பிளீட் ஒர்க் செய்து தரப்படும். கிராண்ட் லுக் வேண்டுமென நினைப்பவருக்கு காஞ்சிபுரம் சில்க்  புடவையில் கூடுதலான டிசைன்களை சேர்த்து மேலும் அழகூட்டப்படுகிறது. இளசுகள் விரும்பும் வகையில் ஷிபான், ஜார்ஜெட் போன்றவற்றில் டிசைனர் சாரீஸ் தான் இவர்களின் ஸ்பெஷல். மேலும் எம்பிராய்டரி செய்த பிளவுஸ், சுடிதார் அனைத்து வயதினருக்கும் கிடைக்கும்.  ஹேண்ட் பேக் ஒரிஜினல் லெதர் கொண்டு தயார் செய்கிறார்கள்.

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்
புத்தம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை அள்ளித்தர ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸில் கை தேர்ந்த நெசவுக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த பட்டு வகைகள் உள்ளன. அதாவது, காஞ்சிபுரம் பட்டு, ஜம்தனி, குந்தன், ஜர்தோஷி ஒர்க், டஸ்ஸர், டுபியான் பிரின்ட் புடவைகள், கலம்காரி, இக்கட் மற்றும் சாஃப்ட் சில்க்ஸ் சாரீஸ் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் லேட்டஸ்ட் சேலைகள், சல்வார்ஸ் போன்றவற்றோடு தீபாவளியை சிறப்பிக்கிறது. மேலும் ஆண்களுக்கான சர்ட்டிங்ஸ் மற்றும் பிராண்ட் ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் என அனைத்து ரகங்களும் தீபாவளிக்கென்றே குவிந்துள்ளது.

போத்தீஸ்
போத்தீஸ் பொட்டிக், ஹைப்பர், உமன்ஸ் வேர்ல்ட் என தனித்தனியே புதிய பிரிவுகளை கொண்டு இந்த தீபாவளியை சிறந்ததொன்றாக மாற்றவுள்ளது. ஏராளமான புத்தம் புதிய ரகங்கள் குட்டீஸ் சுட்டீஸ் முதல் தொடங்கி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காத்துக்கிடக்கின்றன. தீபாவளியையொட்டி ஆடை வாங்கும் அனைவருக்கும் ஒரு ஸ்வீட் பாக்ஸ் இலவசம். நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பார்டருடன், க்ளாசி இம்போர்ட்டட் மெட்டீரியலால் ஆன கண்கவரும் புடவைகள் ஏராளம். சிறப்பம்சம் என்னவென்றால் கையால் எம்பிராய்டரி செய்யப்பட்ட பிளவுஸ்கள் புடவையுடன் இணைந்து வருகிறது.  பட்ஜெட் பர்ச்சேஸ் செய்ய போத்தீஸ்தான் பெஸ்ட்.

ஜூவல்லரி

புதுப்புது டிசைன்கள்...
தி.நகர், உஸ்மான் ரோட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் முஸ்தபா ஜூவல்லர் தனது 17ம் ஆண்டின் கொண்டாட்டத்தை மதிமயக்கும் நகைகள், பரவசமூட்டும் ஆஃபர்கள், பரிசுகளுடன் வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. ஆபரணங்களை வாங்குபவர்களுக்கு பல சிறப்புச் சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ஒரு கேரட் டைமண்ட் 55,000ம் மற்றும் தங்க நகைகளுக்கு கிராமிற்கு ரூபாய் 117 தள்ளுபடியும், விலை உயர்ந்த நவரத்தின கற்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கி தீபாவளிக் கொண்டாட்டங்களையும் சேர்த்தே துவங்கியுள்ளது.  இவர்களின் சிறப்பு தயாரிப்பாக பிரைடல் கலெக் ஷனில் ஜோதா அக்பர், டெம்பிள் கலெக் ஷன் நகைகள் புதுவரவுகள். கைகளால் தயாரிக்கப்பட்டுள்ள பெங்காளி டிசைனில் வடிவமைக்கப்பட்ட விலை உயர்ந்த நவரத்தினங்களால் தயாரான ரிங், நவரத்தின மாலை, நவரத்தின நெக்லஸ், ஆரம் செட், இம்போர்டட் ஹேஸ்டிங் செயின், பிரேஸ்லெட், வளையல், நெக்லஸ் வகைகள், ரோடியம் நெக்லஸ், ரோடியம் பேங்கிள்ஸ் என பலவித டிசைன்கள் கண்களைக் கவரும் விதத்தில் வந்துள்ளன. இவை அனைத்தும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது இவர்களின் சிறப்பம்சம்.

மின்னும் வைரம்
சென்னை தி.நகரின், டைமண்ட் ஜூவல்லரி தயாரிப்பு மற்றும் விற்பனையில் 35 ஆண்டுகளைக் கடந்து கால்பதித்துள்ள EF-IF டைமண்ட் ஜூவல்லர்ஸ் கண்களைக் கவரும் அழகிய வடிவில், நேர்த்தியான தரத்துடன், வைர வளையல்கள், பிரேஸ்லெட்ஸ், நெக்லஸ், மூக்குத்தி, பென்டன்ட், ரிங்ஸ், ஸ்டெட்ஸ், மங்கள் சூத்ரா போன்றவைகளையும் இத்தாலி செயின் மற்றும் முகப்பு நகைகளையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற வடிவில் தயாரித்து மொத்த விலைக்கே வழங்குகின்றனர். இவர்களிடம் உள்ள வைர நகைகள் முதல்தர கிரேடு உடையவையாக இருப்பது இவர்களின் சிறப்பு. மேலும் மொத்த விற்பனை விலையிலேயே வாடிக்கையாளர்களுக்கும் வைர நகைகளை வடிவமைத்து வழங்குகிறது.

காலம் நம் தோழன்...
1948ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட  ஜிம்சன் வாட்ச் ஷோரூம் அடுத்தடுத்து சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில்  விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது மொத்தம் 53 ஷோரூம்களாக வளர்ந்து  நிற்கிறது. ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாட்சுகளிலிருந்து 70 லட்சம்  வரையிலுமான வாட்சுகள் ஜிம்சனில் கிடைக்கின்றன. ரோலக்ஸ், ஒமேகா, ரேடா, டிஸோ,  லாஞ்சிங்ஸ், பேனரய், ப்ரைட்லிங் போன்ற சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட  ப்ரீமியம் வாட்சுகள் இங்கு கிடைக்கின்றன.

இதன் தொடக்கமே லட்சங்களில்தான்.  ஜப்பானிய தயாரிப்புகளான கேசியோ, சிட்டிசன், சீக்கோ ஆகியவையும்  கிடைக்கின்றன. இவற்றின் விலை 20 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது. இந்திய தயாரிப்புகளான டைட்டன், டைமக்ஸ் மற்றும் டென்மார்க் தயாரிப்பான ஃபாசில்  ப்ராண்டுகள் கிடைக்கின்றன. ஃபாசில் வாட்சுகள் இளைஞர்கள் விரும்பும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா வயதினருக்குமான வாட்சுகள், அவரவர்  பட்ஜெட்டுக்கு தகுந்த வாட்சுகள் கிடைக்கின்றன