கிச்சன் டிப்ஸ்



* கேக் கலவையில் 1/2 கப் ஆரஞ்சுச் சாறு சேர்த்தால் கேக் அதிக மென்மை தன்மை பெறும்.
 - ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு.

* அடைக்கு அரைக்கும்போது பரங்கிப்பிஞ்சு சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல் மெத்தென்று இருக்கும்.
* பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டியதும் இல்லை. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசமும், அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் செய்தால் சுவையே தனிதான்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
 
* டொமேட்டோ சூப் செய்து வெகுநேரம் கழித்து அருந்தக் கூடாது. அமிலத்தன்மை வந்து விடும். இதைத் தவிர்க்க இளஞ்சூட்டிலேயே சூப்புடன் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து வைக்க வேண்டும்.
* பாகற்காய் பிட்ளையை இறக்கும்போது இரண்டு, மூன்று உளுந்து அப்பளம் பொரித்துப் போட்டால் ஜோராக இருக்கும்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், துரைப்பாக்கம்.
 
* துவரம்பருப்பு துவையலில் சிறிது வறுத்த கொள்ளு சேர்த்து அரைத்தால் துவையலின் சுவையே தனி.
* எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் 2 டேபிள்ஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா அற்புதமாக இருக்கும்.
  - கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
 
* புளித்த தயிரை வீணாக்காமல் 1 கப் தயிருக்கு, 1 கப் ரவை, இஞ்சி, 1 பச்சைமிளகாய், சிறிது வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து வடை போல தட்டிப் போட்டு சூடாகச் சாப்பிடலாம்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயாரிக்கும் போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்து கொட்டினால் சுவையாக
இருக்கும்.
* அக்ரூட் பருப்புகளை முழுதாக உடைக்க அவற்றை ஓட்டுடன் சிறிது நேரம் வெந்நீரில் ஊறவிட வேண்டும்.
  - ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* கேரட், பீட்ரூட் சம அளவு எடுத்து  விழுதாக அரைத்து நெய் சேர்த்து வெல்லத்துடன் அல்வா கிளற இரும்புச்சத்தும்,  வைட்டமின்களும் நிறைந்த அல்வா கிடைக்கும்.
  - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
 
* தேங்காய் துவையலில் தனியாவையும் சிறிது சேர்த்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.
* வாங்கிய தேயிலையை சிறிது நேரம் வெயிலில் வைத்து பிறகு டீ தயாரித்தால் அதிக மணம், அதிக சுவையாக இருக்கும்.
* இரண்டாவது முறை அரிசி அலம்பின தண்ணீரில் பருப்பு வேகவைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
  - கே.ராகவி, வந்தவாசி.