ஊசிமுனை ஓவியங்கள்



டிசைனர் பிளவுஸ்

நவீன இளம் பெண்கள், அணியும் ஜாக்கெட்டை பலவிதமான டிசைனால் கூடுதல் மெருகூட்டி அதற்கேற்ற வண்ணத்தில்  சேலையினை எளிமையாக ஒரே வண்ணத்தில் அணியத் துவங்கியுள்ளனர். தாங்கள் விருப்பத்திற்கேற்ப ஜாக்கெட்டை கூடுதல் மெருகூட்டி சேலையினை சிம்பிளாக அணியும்போது, அவர்கள் அணிந்திருக்கும் ரிச் காம்பினேஷன் பிளவுஸ் பெண்களுக்கு கூடுதல் அழகைத் தந்து சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்து கூடுதல் அழகைத் தருகிறது.

மணப் பெண்கள் தாங்கள் எடுத்துள்ள முகூர்த்தப் பட்டுப்புடவையில் இருக்கும் டிசைனுக்கு ஏற்ப, அணியப் போகும் ஜாக்கெட்டையும் கூடுதல் அழகாக வடிவமைத்து, கவனத்தை ஈர்த்து ஜொலிக்கின்றனர். பெண்களின் விருப்பத்திற்கேற்ப டிசைனர் பிளவுஸ் தயாரிப்பு என்பது வேலைவாய்ப்பை அள்ளித் தரும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் பெண்களுக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பு.  இந்த இதழில் மணப் பெண்ணிற்கான பட்டு ஜாக்கெட்டை தோழி வாசகர்களுக்காக நம்முடன் கைகோர்த்து வடிவமைத்துக் காட்டுகிறார் பயிற்சியாளர் அனுராதா.

தேவையான பொருட்கள்

பெரிய சைஸ் ஓவல் வடிவ ஸ்டோன்,  செயின் ஸ்டோன், திலக் ஸ்டோன், சிறிய வடிவ கலர் ஸ்டோன், கோல்டன் பீட்ஸ், சில்க் த்ரட், ஷரி திரட், மிஷின் நூல், கோல்டன் கலர் ஷர்தோஷி, ஆரி நீடில், பேப்ரிக் கம், டூத் பிக் ஒன்று, கட்டர்.

செய்முறை

1A