கோல்ட் காபி மில்க் ஷேக்



-ருக்மணிதேவி நாகராஜன்

1. ஒரு டீஸ்பூன் சுடுதண்ணீரில் ஒரு டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடரை இட்டு கலக்கவும்.

2. ஒரு கப் குளிர்ந்த பாலில் தயாராக உள்ள காபி டிகாஷனை சேர்க்கவும்.

3. கோகோ பவுடர் 1 டீஸ்பூன், சுகர் பவுடர் 2 டீஸ்பூன் இணைக்கவும்.

4. தேவையான ஐஸ் க்யூபை சேர்க்கவும்.

5. மிக்ஸியில் நன்றாக நுரைவர அடிக்கவும்.

6. கண்ணாடி குவளையில் சாக்லெட் சிரப்பை சுற்றி ஊற்றவும்.

7. தயாராக உள்ள கோல்ட் காபியினை குவளையில் நிரப்பவும்.

8. சம்மரை சமாளிக்கவும்.