தெரியுமா உங்களுக்கு? உலக சாதனை புரிந்த பெண்கள்



* பிரான்சு நாட்டைச் சேர்ந்த ‘ஜெஸிகா டாண்டி’ என்ற பெண் தனது எண்பதாவது வயதில் ஆஸ்கர் விருது பெற்றார்.
* உலகின் முதல் வங்கி மேனேஜர் பதவி வகித்தவர் குமாரிமே பட்மன் என்ற இங்கிலாந்து பெண். இவர் 1910ல் இப்பதவி வகித்தார்.
* கட்டிடக்கலையில் பட்டம் பெற்ற முதல் பெண் பிரிட்டனைச் சேர்ந்த ‘ஈதைல் மேரி சார்லஸ்’ என்பவர். இவர் 1898ல் பட்டம் பெற்றார்.

* விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் பெற்றவர் மார்ட்டினா ஹிங்கிஸ். இவர் 3.7.1997 அன்று தனது 16வது வயதில் இப்பெருமை பெற்றார்.
* விண்வெளி சென்ற முதல் அமெரிக்க வீராங்கனை ‘ஸாலி ரைட்’ ஆவார். இவர் 1983ல் சாலஞ்சர்-7 என்ற விண்வெளி ஓடத்தில் விண்வெளி சென்றார்.
* துருக்கி நாட்டின் முதல் பெண் பிரதமராக ‘தான்சு சில்பர்’ என்பவர் 15.6.1993ல் பதவியேற்றுக் கொண்டார்.
* சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை சாந்தா ராமசாமி என்பவராகும். இவர் இந்தியாவைச் சேர்ந்த பெண்.
* ஜிப்ரால்டர் ஜலசந்தியை நீந்திக் கடந்த முதல் இளவயது நீச்சல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் ‘‘ஆர்த்தி பிரதான்’’ என்ற இந்திய நாட்டு வீராங்கனை. இவர் தனது 17வது வயதில் 30.8.1988 அன்று இச்சாதனை புரிந்தார்.
* 18 வயதிலேயே செய்தியாளராகப் பணிபுரிந்த முதல் பெண், அமெரிக்காவைச் சேர்ந்த ‘நெல்லி ப்லை’ என்ற பெண்.
* மோட்டார் பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் பெண் மேடம் லபரோஸ்ஸி. இவர் பந்தயம் பாரிஸில் 1899ல் நடைபெற்றது.
* நீர்மூழ்கி கப்பலின் முதல் பெண் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் ‘ஸால்வேயிங் ப்ரே’ என்ற நார்வே நாட்டுப் பெண். இவர் 11.9.1995 அன்று இப்பொறுப்பை ஏற்றார்.
* உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபியை பெற்ற பெண் ‘லெஸ்ஸி பிரவுன்’ என்ற இங்கிலாந்து நாட்டுப் பெண்மணியாவார். இவர் 25.7.1978 அன்று டெஸ்ட் டியூப் பேபியை பெற்றெடுத்தார்.
* அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலை பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள பாடலை எழுதியவர், ‘எம்மா லாசரஸ்’ என்ற அமெரிக்கப் பெண் கவிஞர்.
* ஐக்கிய நாடுகள் சபை ராணுவத்தில் இடம் பெற்ற முதல் ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் ‘ஹாங் வாடிங்’ என்ற தைவான் நாட்டுப் பெண்.
* 21 பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் மற்றும் ஒரே பெண் விஜயலட்சுமி பண்டிட்
* ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட அதிக வயதான வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் எலாய்னரி செரிஸ் என்ற அமெரிக்க வீராங்கனை. இவர் தனது 49வது வயதில் 1996ல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் கத்திச் சண்டை போட்டியில் கலந்து கொண்டார்.
* லாரிசா லாடினினா என்ற ரஷ்ய நாட்டு வீராங்கனை 1956, 1960, 1964 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்குகளில் கலந்து கொண்டு 18 பதக்கங்களை பெற்று சாதனை புரிந்தார்.
* கூர்னிகோ என்ற ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீராங்கனை தனது 14வது வயதில் சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் குறைந்த வயதில் ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சிறப்பைப் பெற்றார்.
* ஜெசிகா வாட்சன் என்ற ஆஸ்திரேலியா நாட்டுப் பெண் தனது 16வது வயதில் 2009ம் ஆண்டு 210 நாட்களில் பாய்மரப் படகு மூலம் உலகைச் சுற்றி வந்து, இளவயதில் பாய்மரப் படகில் கடல் மூலம் உலகைச் சுற்றி வந்த முதல் மற்றும் ஒரே பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

- சா.அனந்தகுமார், கன்னியாகுமரி.