இங்கிலாந்து ராணியின் அரண்மனைகள்



வாசகர் பகுதி

இங்கிலாந்து ராணி எலிசபெத்-IIன் அதிகாரபூர்வமான வீடு, ‘தி பக்கிங்ஹாம் அரண்மனை’. இதனை 369 மில்லியன் பவுண்டு செலவில் புதுப்பிக்க உள்ளனர். இவ்வளவு செலவு செய்து புதுப்பித்தல் தேவையா என பரவலாக கேள்வி எழுந்துள்ளது. இருந்தாலும் அவருடைய சில வீடுகள் பற்றி நாம் அறிந்து கொள்வோமா?

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)

1. இங்கிலாந்து பெர்க்ஷயரில் உள்ள வின்ஸ்டர் கோட்டை
11ம் நூற்றாண்டில் வில்லியம் என்பவரால் கட்டப்பட்ட கோட்டை. ஐரோப்பாவில் மிக நீண்ட வருடங்களாக குடியிருப்பில் உள்ள அரண்மனை இதுதான். ராணியின் நகர்ப்புறம் சாராத ஒதுங்கின வீடு. வருடத்தில் மிக அதிக வாரக் கடைசி நாட்களை ராணி இங்குதான் கழித்துள்ளார். இங்கு ராணி தன்னுடைய ஓவியம் ஒன்றை திறந்து வைத்தார். பிரிட்டிஷ் ரெட் கிராஸுக்கு, ராணி தன்னுடைய அர்ப்பணிப்பை மிக நீண்ட வருடங்களாக வழங்கி வந்ததற்கு நன்றி தெரிவித்து பாராட்டி ஹென்ரி வார்டு என்பவர் வரைந்து கொடுத்த ஓவியம் இது.

2. ஸ்காட்லாந்து எடின்டர்க் ஹாலிரூத் ஹவுஸ் அரண்மனை
ஸ்காட்லாந்து வரும்போது ராணி தங்கும் வீடு. இங்கு ஸ்காட்ஸ் ராணி மேரிக்கு இருமுறை திருமணம் நடந்துள்ளது. 2010ல் போப் பெனிடக்ட்-16 இந்த வீட்டிற்கு வந்து ராணியை பார்த்தார். போப் பிரிட்டனுக்கு வருவது இதுவே முதல் தடவை.

3. வடக்கு அயர்லாந்து அபெர்தீன் ஷயர் பால்மோரல் கோட்டை
வடக்கு அயர்லாந்தில் ராணியின் அதிகாரபூர்வ வீடு இது. ஐரீஸ் சுதந்திரத்திற்காக நடந்த சண்டையின்போது உருவாக்கப்பட்டது. லேபர் கட்சி எம்.பி. மோமோவ்லாம் இந்த கோட்டை வீட்டை மக்கள் பார்வைக்கு திறந்து விட்டார். இந்தக் கோட்டையில் உள்ள ஜன்னல்கள் அனைத்தும் துப்பாக்கி துளைக்காத தன்மை கொண்டவை.

4. ஸ்காட்லாந்து அபெர்தீன் ஷயர் பால்ரல் கோட்டை
இந்தக் கோட்டையை பராமரிக்க 50 பேர் உள்ளனர். இங்கு மான் குட்டிகள், கால்நடைகள் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்தக் கோட்டைக்கு பிரிட்டிஷ் பிரதமரை ராணி வார இறுதி நாட்களில் வரவழைப்பார். இங்கு முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேயர் வந்துள்ளார். பல ருசிகரமான விளையாட்டுகளை கொண்ட வியக்கும் இடம் என புகழ்ந்தார்.