இந்த மாதம் இனிய மாதம்



ஹாய்... எப்படி இருக்கீங்க? என் பேரு புவனேஸ்வரி. சில ஆன்மிக  விஷயங்களைச் சொல்றேனா, என்னை எல்லாரும் புவனேஸ்வரி மாமிங் கறாங்க. சரி, இந்த மார்ச் மாசம் என்னென்ன விசேஷங்கள்லாம் வருது,  பார்க்கலாமா?

5ம் தேதி மாசி மகம்... மாசி மாசம் வர்ற மக நட்சத்திரத் திருநாள்.  அன்னிக்கு பௌர்ணமியும் கூட. ஒவ்வொரு மாசத்தின்போதும்தான்  மகம் நட்சத்திரம் வருது, மாசி மக நட்சத்திரத்துக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? இந்த மாசி மாச மக நட்சத்திரத்திலேதான் மகாமகம் வருது. பிரம்மன் அமிர்தம் அடங்கிய ஒரு குடத்தை உண்டு பண்ணி, ஒரு பிர ளய காலத்துல, பெருவெள்ளமாகப் புரண்டோடிய நீரோட்டத்தில் விட் டார். சிவபெருமான் ஒரு பாணத்தால அந்தக் குடத்தை அடிக்க, குடம்  உடைந்தது. அமிர்தம் சிதறியது. உடைந்த குடம் விழுந்த இடம்தான்  பாஸ்கர க்ஷேத்திரம். இப்போதைய கும்பகோணம். அமிர்தம் காவிரி நதி யில் கலந்தது. அப்படிக் கலந்த தொடக்க இடம்தான் ‘சுவாமி புஷ்கர ணி’ன்னு சொல்லப்படுது. புஷ்கரணி அமிர்தத்தில் தோன்றியவர்தான்  அமிர்த கடேஸ்வரர். அதுதான் - மாசி மக நட்சத்திர தினம்!

மகாமக தினம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. 12  ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கிரகம், மகம் நட்சத்திர தினத்தன்று சிம்ம  ராசிக்கு வரும். இதே நாள்லதான் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதா வரி, நர்மதை, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு என ஒன்பது புண் ணிய நதிகளும் மகாமகக் குளத்தில் கலப்பதாக ஐதீகம். இந்த நாள்ல,  இந்த தீர்த்தத்தில் நீராடினா, முப்பிறவிப் பாவங்களும் தொலையுங்கறது நம்பிக்கை.

ஒவ்வொரு வருஷமும் கும்பகோணத்துல மாசிமகத்தை விமரிசையாகக்  கொண்டாடுவாங்க. மகாமகக் குளத்தில் நீராட முடியாதவங்க அவரவர்  வசிப்பிடத்திலுள்ள குளம், ஏரி, கடல் அல்லது வீட்டுக் குழாயடியிலயா வது நீராடி சிவபூஜை செய்யலாம். அன்றைய தினம் ஒன்பது சுமங்கலி களுக்கு மஞ்சள், மலர், துளசி இவற்றை தானமாகக் கொடுக்கறதும் ரொம்பவும் விசேஷம்.

இது மகாமக நாள்ல மட்டுமே செய்யவேண்டிய சங்கதி இல்லீங்க; ஒவ் வொரு மாசி மாசத்துலேயும் மக நட்சத்திர நாள்ல செய்யலாம்; புண்ணி யம் சேர்க்கலாம். மாசி மகத்தன்னைக்கு விரதம் இருந்து சிவனைத் து தித்தால் நம் துயரெல்லாம் நீங்கி, வளமான வாழ்வு நிரந்தரமாக வந்து  சேருமுங்க, இது நிச்சயம்.

இதே பௌர்ணமி நாள்ல (5.3.2015) இன்னொரு விசேஷமும் உண்டு...  ஹோலி பண்டிகை. ‘தானே கடவுள்’னு பிரகடனப்படுத்திக்கொண்டான்  அரக்கன் ஹிரண்யன். தன் உத்தரவுக்கு மக்களோடு, தன் சொந்த மக னும் அடிபணிய வேண்டும்னு நிர்ப்பந்தித்தான். மகன் பிரஹலாதனோ, நாராயண நாமம்  தவிர வேறு கடவுள் பெயரையே உச்சரிக்க அறியாதவன்.

அவன், ஒரு  அரக்கன் பெயரை, தன் தந்தையே ஆனாலும், எப்படிச் சொல்வான்?  வெறுப்புற்ற ஹிரண்யன், அவனை பல சித்ரவதைக்கு உள்ளாக்கினான்.  ஆனா, எந்த பாதிப்பும் ஏற்படலை. புன்சிரிப்போடு மீண்டு வந்த பிரஹ லாதனை தன் சகோதரி ஹோலிகாவிடம் ஒப்படைத்தான். நெருப்பும்  தன்னைச் சுடாதுன்னு வரம் பெற்றிருந்தாள் ஹோலிகா. அவள் பிரஹ லாதனுடன் தீப்புகுந்தால், மகன் எரிந்துபோவான்னு எதிர்பார்த்தான்  அரக்கன். ஆனால், பிரஹலாதன் உச்சரித்த நாராயண மந்திரம், அவள்  பெற்றிருந்த வரத்தையும் மீறி ஹோலிகாவை சாம்பலாக்கியது. பிரஹலாதன் எந்த பாதிப்பும் இல்லாம நின்றான்.

இதை நினைவுப்படுத்தற வகையில திறந்த வெளியில் தீ மூட்டி அதைச் சுற்றி கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்வது தான் ‘ஹோலி’. ஹோலிகா அழிந்ததைக் கொண்டாடும் ஆனந்த விழா.  ஹோலி விழாவிலே வர்ணப்பொடியை மத்தவங்க மேல தூவறாங்களே,  அது ஏன்? தன்னைவிட ராதை சிவந்த மேனியளாகக் காட்சி யளிப்பதைக் கண்ட  கண்ணன், தாய் யசோதையிடம் குறைபட்டுக்கொண்டான். 'உனக்குப்  பொறாமைன்னா, அவ மேல வண்ணப் பொடிகளைத் தூவி அவளைக்  கருமையாக்கேன்’ என்று யசோதை யோசனை சொன்னாள். அவ்வாறே  கண்ணன் செய்ய, ராதையும் அவன் மீது வண்ணப்பொடிகளைத் தூவினாள். அதுவே ஹோலிப் பண்டிகையின் ஒரு அம்சமாகப் பழக்கத்துக்கு வந்தது என்றும் சொல்லுவாங்க.

சரி, உங்களுக்கு நோன்பை ஒட்டிய ஒரு சமையல் டிப்ஸ் தர்றேன். அது  என்ன நோன்பு? 14.3.2015 அன்னிக்கு வர்ற ‘காரடையான் நோன்பு’. பரமசிவனும் உமாதேவியும் தனித்திருந்த ஒரு நேரம். உமாதேவி விளை யாட்டாக ஐயனின் கண்களைப் பொத்திட்டா. அண்ட சராசரமே இரு ளில் மூழ்கிப்போச்சு. இறைவன் கோபிச்சுகிட்டார். தன் குற்றம் உணர்ந்த  உமையன்னை, ஐயனிடம் சாப விமோசனம் கேட்டாள். 'பூலோகத்தில்  தவமிருந்து எம்மை பூஜித்தால், யாம் பிரசன்னமாகி, உன்னை ஏற்றுக்  கொள்வோம்’னு சொன்னார் பரமேஸ்வரன்.

காஞ்சி தலத்துக்கு வந்து, கம்பா நதிக்கரையில் அமர்ந்தாள் அன்னை.  மணலால லிங்கம் உருவாக்கினாள். ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டாள். அன் னையை மேலும் சோதிக்க நினைச்ச பரமன், ஒரு பிரளயத்தை உரு வாக்கினார். வெள்ளம் பெருகி வருவதைப் பார்த்த அன்னை, திடுக்கி ட்டு லிங்கத்துக்கு ஆபத்து விளையுமோன்னு அஞ்சினாள். உடனே கார டையான் நோன்பை மேற்கொண்டாள். காரடை தயாரித்து அதை ஈச னுக்கே நைவேத்யம் செய்து ஒரே சிந்தனையுடன் அவன் நாமம் ஜபித் தாள். பிரளயம் விலகிப்போச்சு; பரமனின் காட்சி கிடைச்சுது. அன்னை  காமாட்சியாகவும், ஐயன் ஏகாம்பரேஸ்வரராகவும் கல்யாணம் சிறப்பாக  நடந்துச்சு. இதே விரதத்தைக் கடைப்பிடிச்சதாலதான் எமன் கையிலி ருந்து சத்தியவானின் உயிரை சாவித்ரியால் மீட்க முடிந்தது, தெரியுமா?

இந்த மாசம், 14ம் தேதி, சனிக்கிழமை, காலையில சீக்கிரமா எழுந்து,  குளிச்சுட்டு, தூய ஆடை உடுத்தி காரடையைத் தயாரிக்கணும். அடை யோட வெண்ணெய் சேர்த்து சிவபெருமானுக்குப் படைச்சு வணங்க ணும். ஒரு மஞ்சள் சரடை எடுத்து பூஜையில் வைத்து, வலது மணிக்கட் டில் கட்டிக்கணும். திருமணமான பெண்கள், கணவர் நோய் நொடியி ன்றி வாழ்ந்து தமக்கும் குடும்பத்தாருக்கும் ஆதரவாக இருக்கணும்னு  வேண்டிகிட்டு, சரடைக் கழுத்தில் கட்டிக் கொள்றது வழக்கம். கன்னிப்  பெண்கள் நல்ல கணவன் அமைந்து, பன்னெடுங்காலம் வாழ்ந்து வளம்  பெறணும்னு வேண்டிப்பாங்க. ‘தீர்க்க சுமங்கலி பவ,‘ன்னு பரமேஸ்வர ன்-பார்வதி அவங்களுக்கு அருள்பாலிப்பாங்க.

காரடை தயாரிப்பது எப்படி?

200 கிராம் பச்சரிசியை களைந்து, உலர்த்திக்கோங்க. அதை மிக்ஸியில  போட்டு, மாவாக அரைச்சுக்கோங்க. இதை, கடாயில் போட்டு  வறுக்கணும்.  25 கிராம் கறுப்பு காராமணியை வெந்நீரில் ஊற வையுங்க. ரெண்டு  மணிநேரம் காராமணி ஊறட்டும். சின்ன தேங்காயை உடைச் சுக்கோங்க. ஒரு மூடியைத் துருவியும் இன்னொண்ணை பல்பல்லாக  நறுக்கியும் வெச்சுக்கோங்க. ரெண்டு தம்ளர் நீரை கடாயில் விட்டுக்  கொதிக்க விடுங்க. பொடித்த 100 கிராம் வெல்லத்தை அதுல தூவிக்  கரைச்சுக்கோங்க. இதோடு, ஊறவைத்த காராமணி, தேங்காய்த் துருவல்,  தேங்காய்ப் பல் இவற்றையும் சேர்த்துக்கோங்க. மாவாக அரைச்சு  வெச்சிருந்த அரிசியைத் தூவியபடியே மெல்லக் கிளறுங்க.

கட்டித் தட் டாம, உருண்டையாக ஆகாம, மிதமான சூட்டில் கிளறிவிடுங்க. நீர் வற்றி, பதமாக வந்தப்புறம் இந்த கலவையை வடை தட்டுவது போல  வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி, இட்லி சட்டியில்  வைத்து வேக வெச்சு எடுத்துக்கோங்க. இதுதான் கார அடை. இதையே  வெல்லம் சேர்க்காம, உப்பு சேர்த்தும் தயாரிக்கலாம். இது உப்பு கார  அடை. இரண்டையுமே இறைவனுக்குப் படைக்கலாம்‘யுகாதி’ன்னு போற்றப்படும் தெலுங்கு வருடப் பிறப்பு மார்ச் 21 அன்னிக்கு வருது தெலுங்கு வருடத்தைப் பொறுத்த வரைக்கும், ஒவ்வொரு மாசத்துக்கும் முப்பது நாட்கள்.

அதாவது, தெ லுங்கு வருஷத்துக்கு மொத்தம் 360 நாள்தான்! சென்னைக்கு அருகே  திருவிடந்தையில நித்ய கல்யாணப் பெருமாள் கோயில் இருக்கு. இவர்  காலவ முனிவரின் 360 பெண்களை தினம் ஒருவளாக மணம் புரிந்தா ராம். அதனால தெலுங்கு வருஷத்துக்கு 360 நாட்கள்னு நிர்ணயித்ததாக வும் சொல்வாங்க. இந்நாளில் மஹாவிஷ்ணுவோட  அவதாரமான வரா ஹத்தை வழிபட்டு (திருவிடந்தையில் இருக்கற வராஹப் பெருமாள்), தம்  வாழ்க்கையில ஏற்படக்கூடிய எந்தப் பிரச்னையையும் வேரோடு களைந்து, மன நிம்மதி தருமாறு வேண்டிக் கொள்ளலாம்.