என் சமையலறையில்!



சப்பாத்தி, பூரிக்கு இடும் போது மாவு இடும் பலகையில் லேசாக  எண்ணெய் தடவிவிட்டுப் பிறகு இட்டால், கட்டையில் ஒட்டாமல் நன் றாக இட முடியும். கறிவேப்பிலை, புதினா அல்லது கொத்தமல்லி துவையல் அரைக்கும்  போது உளுத்தம் பருப்பு சேர்ப்பதற்கு பதிலாக வேர்க்கடலை அல்லது  எள்ளை வறுத்துச் சேர்த்து அரைக்கலாம். புது சுவை கிடைக்கும். அடை மாவு குறைவாக இருந்தால் அதில் ஒரு கப் தோசை மாவை யும் ஓட்ஸ் அல்லது ஒரு ரஸ்க் தூள் ஒரு கைப்பிடியையும் கலக்கவும்.  அடை நன்றாக, மொறுமொறுப்பாக இருக்கும்.

ஜூஸ் தயாரிக்கிறோம்... உடனே அருந்த வேண்டுமா? ஐஸ் க்யூபை  ஜூஸில் உடைத்துப் போட்டால் ஜில்லென்று ஆகிவிடும். கிளாஸின்  ஓரங்களில் ஐஸ் துகள்களைத் தூவினால் ஜில்லிப்பு நெடு நேரத்துக்கு இருக்கும்.  மோர் மிளகாய் வற்றல் போடப் போகிறீர்களா? மிளகாயை தயிரில் ஊற வைக்கும் போது, தயிருடன் சிறிது வெந்தயம், தேவையான உப்புச் சேர் த்து ஊறவிடவும். மிளகாயில் காரம் இருக்காது.
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

பச்சை மிளகாயுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கண்ணாடி  பாட்டிலில் போட்டு, காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைத்துவிட்டால் ஒரு வாரம் வரை  கெடாமல் இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

பச்சரிசியை வெந்நீரில் நனைத்து அரைத்தால் ஆப்பம் மொறுமொ றுப்பாக வரும். இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைத்து  எடுத்தால் 'வெங்காய சட்னி’ ரெடி. கட்லெட் செய்யும்போது ஏதாவது ஒரு கீரையை அரிந்து, கலந்து,  பிசைந்து, பொரித்து எடுக்கவும். சுவையும் சத்தும் அதிகமாக இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

தேங்காய் பர்பி செய்யும் போது, அதைத் தட்டில் கொட்டி சமமாக்கி யதும் அதன் மீது சிறிது பால் பவுடர் சேர்க்கவும். பிறகு வில்லைகள்  போடவும். ருசி கூடியிருக்கும். உருளைக்கிழங்கு பொரியல் மொறுமொறுவென்று இருப்பதற்காக  சிலர் கடலை மாவைத் தூவுவார்கள். அதைவிட பொட்டுக்கடலை  மாவு தூவுவது சிறந்தது. சுவை, ஆரோக்கியம் இரண்டுக்கும் உத்தரவாதம்.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-13.

காலையில் காய்ச்சிய பாலை மாலையில் காய்ச்சும் போது, சிறு தண லில் (குறைந்த தீயில்) காய்ச்ச வேண்டும். பால் திரிவது போல இருந் தால், ஒரு துளி ஆப்ப சோடா தூவி, பால் பாத்திரத்தை சுழற்றி இறக்க வும். பால் திரியாது. காபி, டீ கலந்தால் ருசி மாறாது. தயிர் உறை ஊற் றினாலும் கசக்காது.  பாகற்காயின் கொட்டைகளை நீக்கிவிட்டு உப்பில் பிசறவும். எலு மிச்சைச்சாறில் போட்டு, அல்லது புளிக்கரைசலில் போட்டு எடுக்கவும்.  பிறகு பாகற்காயை மட்டும் எண்ணெயில் வதக்கி, சமைத்தால் கசப்பே  இருக்காது. நெய்யில் சிறிது அச்சு வெல்லம் போட்டு வைத்தால் நீண்ட நாள்  கெடாமல் இருக்கும்.
- எஸ்.கௌரிபாய், பொன்னேரி.

எந்த கிரேவியாக இருந்தாலும் அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு  சிறிது முந்திரியுடன் பால் சேர்த்து அரைத்து கிரேவியில் விட்டு  கொதிக்க விடவும். பிறகு இறக்கவும். ஹோட்டல் கிரேவி போல கெட்டி யாக இருக்கும். வீட்டில் ஜாம் தயாரிப்பவர்கள், சரியாக பழுக்காத பழங்களையே  பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீண்ட நாட்களுக்குக் கெடா மல் இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி-15.