என் அப்பா



ஹீரோ...  ஆல்ரவுண்டர்.... இன்ஸபிரேஜன்!

‘‘எனக்கு நல்லா நினைவிருக்கு. சின்ன வயசுல என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட உனக்குப் பிடிச்ச ஹீரோ யார்னு கேட்டா, கமல், ரஜினினு ஆளாளுக்கு ஒருத்தரை  சொல்வாங்க. நான் மட்டும் எங்கப்பாதான் எனக்கு ஹீரோனு சொல்வேன். அப்பவும் சரி... இப்பவும் சரி...

எங்கப்பாதான் எனக்கு ஹீரோ... அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்...’’ - அப்பாவைப் பற்றிப் பேசச் சொன்னால், அன்பில் நனைகிறார் டாக்டர் அஞ்சனா. நீரிழிவு  மருத்துவத்தில் உலக அளவில் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்கும் டாக்டர் மோகனின் செல்ல மகள்.

அப்பாவின் பேர் சொல்லும் வகையில் அஞ்சனாவும் நீரிழிவு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ‘‘எனக்கு நல்லா நினைவிருக்கு. சின்ன வயசுல என்  ஃப்ரெண்ட்ஸ்கிட்ட உனக்குப் பிடிச்ச ஹீரோ யார்னு கேட்டா, கமல், ரஜினினு ஆளாளுக்கு ஒருத்தரை சொல்வாங்க. நான் மட்டும் எங்கப்பாதான் எனக்கு ஹீரோனு  சொல்வேன். அப்பவும் சரி... இப்பவும் சரி... எங்கப்பாதான் எனக்கு ஹீரோ... அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்...’’ - அப்பாவைப் பற்றிப் பேசச் சொன்னால்,  அன்பில் நனைகிறார் டாக்டர் அஞ்சனா. நீரிழிவு  மருத்துவத்தில் உலக அளவில் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்கும் டாக்டர் மோகனின் செல்ல மகள்.  அப்பாவின் பேர் சொல்லும் வகையில் அஞ்சனாவும் நீரிழிவு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

எனக்கு எல்லாமாகவும்... அஞ்சனாவின் அப்பா டாக்டர் மோகன் ‘‘அம்மா, அப்பானு ரெண்டு பேரும் பிரபலங்களா இருக்கிறபோது, அவங்கக் குழந்தைங்களுக்கு  அதுவே பெரிய டிஸ்அட்வான்ட்டேஜ். சச்சின் டெண்டுல்கரோட  பையனும் அவரைப் போலவே இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. பிரபலங்களோட வாரிசுகள் இந்த  எதிர்பார்ப்பை சந்திச்சாகணும். அதுலயும் அஞ்சனா, அம்மா, அப்பா, தாத்தானு மூணு பேரோட எதிர்பார்ப்பை சந்திக்கணும். அம்மா, அப்பாவோட செல்வாக்கோ,  பேர், புகழோ ரொம்ப நாளைக்கு சப்போர்ட் பண்ணாது. அதைத் தாண்டின உழைப்பும் திறமையும் இருந்தாதான் மேல மேல உயர முடியும். அதை என் மகள்  நிரூபிச்சிட்டா. என்னோட சாதனை என் மகளால தாண்டப்படறதுல என்னைவிட அதிக சந்தோஷப்படற ஆள் வேற யாரும் இருக்க மாட்டாங்க.

என் வயசுல நான் சாதிச்சதைவிட அதிகமான விஷயங்களை என் மகள் சாதிச்சுக் காட்டிட்டா. ரிசர்ச்ல அவ காட்டற ஆர்வம், அதுக்காக அவளைத் தேடி வர்ற  விருதுகள்னு எல்லாமே என்னை பிரமிக்க வைக்குது. பேஷன்ட்ஸ்கிட்ட அவளோட அணுகுமுறையும் அன்பும் வியக்க வைக்குது. அஞ்சனா பிரமாதமான  அட்மினிஸ்ட்ரேட்டரும்கூட. ஹாஸ்பிட்டல், வீடுனு ரெண்டையும் பர்ஃபெக்டா பேலன்ஸ் பண்ணத் தெரிஞ்சவள். வீட்ல யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமப்  பார்த்துப்பா. குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கிறது, ஹோம் ஒர்க்கை கவனிக்கிறதுனு எதையும் விட்டுக் கொடுக்க மாட்டா. சமீபத்துல என்னோட 60வது பர்த்டே  கொண்டாடினோம். ‘10 பையன் இருந்திருந்தாகூட கிடைக்காத சந்தோஷத்தை உங்களோட ஒரே ஒரு பொண்ணு கொடுத்துட்டாங்க’னு அத்தனை பேரும்  பாராட்டினாங்க. உண்மைதான்... ‘பையன் இல்லையே’ங்கிற குறையே தெரியாத அளவுக்கு எனக்கு எல்லாமாகவும் இருக்கிற அன்பு மகள் அஞ்சனா...’’