ஆபெர்ஜைன் மொசரெல்லா பேக்



(கத்தரிக்காய் மொசரெல்லா பேக்)

ராஜேஸ்வரி விஜயானந்த்
www.rakskitchen.net


உங்கள் கவனத்துக்கு...

* நீள வகை கத்தரிக்காயை தேர்ந்தெடுக்கவும். அல்லது பெரிய கத்தரிக்காயை வட்டமாக வெட்டி இதே போல செய்யலாம்.
* கத்தரிக்காயை தோசைக்கல்லில் வதக்காமல், அவனிலும் வாட்டிக் கொள்ளலாம்.
* இதையே நிறைய பேருக்கு செய்ய வேண்டும் என்றால் பெரிய அவன் பானில் அடுக்கிச் செய்ய லாம். இதே ரெசிபியை 2 மடங்கு அல்லது மும்மடங்காக்கி எளிதில் நிறைய பேருக்கு செய்யலாம்.

என்னென்ன தேவை?
(Single serving)

நீள வகை கத்தரிக்காய் - 2, பாஸ்டா சாஸ் -  4 டேபிள்ஸ்பூன், 
மொசரெல்லா சீஸ்  கப், ஆலிவ் எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
1.கத்தரிக்காயின் காம்புப் பகுதியை நீக்கி விடவும்.
2.ஒரு கத்தி கொண்டு  இஞ்ச் அளவுக்கு பட்டையாக வெட்டிக்கொள்ளவும்.
3.ஒரு தட்டில் பரப்பி, ஆலிவ் எண்ணெய் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து எல்லாப்புறமும் படும்படி கலந்து வைக்கவும்.
4.தோசைக்கல்லை மிதமான தீயில் சூடு ஏற்றி, அதில் வெட்டிய கத்தரிக்காயை இருபுறமும் பொன்னிறமாக வதக்கி வைத்துக்கொள்ளவும்.
5.அவன் sணீயீமீ பாத்திரத்தில், முதலில் பாஸ்டா சாஸை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குப் பரப்பவும். மேலே வதக்கிய கத்தரிக்காயை அடுக்கவும். 2 அல்லது மூன்றை அடுக்கினால் போதும். மேலே மீண்டும் பாஸ்டா சாஸை பரப்பவும். பிறகு சீஸை தூவவும்.
6.மீண்டும் கத்தரிக்காய், பாஸ்டா சாஸ், சீஸ் என அடுக்கவும். இதே போல பாத்திரத்தின் விளிம்பு வரை அடுக்கலாம்.
7.அவனை 200 டிகிரி செல்சியஸுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். கத்தரிக்காயை அடுக்கிய பாத்திரத்தை அதில் வைத்து, 20 நிமிடம் அல்லது சீஸ் பொன்னிறமாக ஆகும் வரை (அல்லது சீஸ் கொப்பளிக்கும் வரை) பேக் செய்யவும். உப்பு, மிளகுத் தூள் சேர்த்து பரிமாறவும்.