ப்ரியங்களுடன்



‘சினிமா ஸ்பெஷல்’ தூள்! ‘ஆன் ஸ்க்ரீன்’, ‘ஆஃப் ஸ்க்ரீன்’ இரண்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள்!
- பி.வைஷு, சென்னை-68., வத்சலா சதாசிவன், சென்னை-64., ப.மூர்த்தி, பெங்களூ–-97 மற்றும் மயிலை கோபி, சென்னை-83.

பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்காமல் செடி வளர விதை தரும் ஆசிரியைகள் சாமுண்டீஸ்வரியும் மேரி மேகலாவும் வானத்தைப் போல உயர்ந்தவர்கள்.
- கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு-43., உஷா முத்துராமன், மதுரை-6 (மின்னஞ்சலில்)..., வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்)... மற்றும் தி.பார்வதி, திருச்சி-7.

ஆனந்தியைப் போல மற்ற ஆசிரியர்களும் மாறினால், தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் நிலை யாருக்கும் ஏற்படாது.
- கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

அம்மா பெயருக்கேற்ப அரசி போல கம்பீரமாக அமர்ந்திருக்க, பின்னால் மகன் சூரி பவ்யமாக கைகட்டி நிற்க... படமே இருவருக்குமான நேசத்தை உணர்த்திவிட்டது!
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16., பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்., எஸ்.ரேவதி, சேலம்-3., கீதா பிரேமானந்த், சென்னை-68 மற்றும் லட்சுமி குஞ்சரம், சென்னை-26, பத்மா மணி, சென்னை-89, பானுபெரியதம்பி, சேலம்-30 (மின்னஞ்சலில்)...

‘நோ ஆனியன், நோ கார்லிக் 30’ இணைப்பு அட்டகாசம். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டது ‘ரிங் ரோடு சுபா’ டீம்.
- பிரதிபா ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர். 

மாற்றம் ஒன்றே மாறாதது ஃபார்முலாவை கடைபிடித்தால் தற்பெருமைக்கு இடமே இல்லை.
- ஆர்.ஜே.சுஜாதா, சென்னை-12.

விளையாட்டுத் துறையில் பெண்கள் பிரகாசிப்பது அபூர்வம். அவர்கள் திறமையெல்லாம் மேகம் மூடிய வானம்தான். மேகத்திரையைக் கிழித்து ஒளிரும் நட்சத்திரம் சாய்னா!
- குமாரி சுப்பிரமணியன், திருப்பத்தூர்.

வெண்ணிலாவின் நினைவுகளில் திரைப்பட பாடல்களின் சொல்லப்படாத மௌனம்.
- ஜே.தனலட்சுமி, சென்னை-12.

‘அறிவோம் ஆயிரம்’ பகுதியில் உலகின் டாப் 10 குகைகள் பற்றிய தகவல்கள் அற்புதம்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

அம்ரிதா ப்ரீதம் அவர்களின் வரலாறு அவரைப் பற்றிய நல்ல பதிவு.
கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி மற்றும் மு.செந்தாமரை, திருவிடைமருதூர்.

நளினியின் இரட்டைக் குழந்தைகள் தாய்ப்பாசத்தில் கரைந்தபோது மனசு நெகிழ்ந்தது.
 அ.பிரேமா, சென்னை-68 மற்றும் பாவனா பிரகாஷ், மயிலாடுதுறை.

‘ஜோன் பயாஸ்’ பற்றிய கட்டுரை அருமை.
- மீனா வடிவேல், சென்னை-83 மற்றும் சுகந்தா ராம், சென்னை-59.

தோழிகள் ‘என் சமையலறையில்’ கொடுத்திருந்த டிப்ஸுகள் அனைத்தும் பிரமாதம்!
- ஆர்.பிரகாசம், நல்லாலம்.

‘சுற்றுலா’ காஞ்சிபுரம் ரத்தின சுருக்கம்! - வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.
ஆர்.கே.லக்ஷ¢மி சொல்லியிருக்கும் கருத்துகள் அத்தனையும் மறுக்க முடியாதவை.
- ராஜி குருஸ்வாமி, சென்னை-88.

கவுஷிக்கின் வார்த்தைகளும் அவரின் சமையல் குறிப்பும் அபாரம். ‘ஒளிகாட்டி’ மாணவர்களுக்கு நல்வழிகாட்டி. தேன்மொழி டீச்சரின் நல்ல மாணவர்களை உருவாக்கும் முயற்சிக்கு கொடுக்கலாம் பாராட்டு. ‘‘ஹோம் கார்டன்’ பக்கத்து ஊரில் பார்த்த பலா, பப்பாளியை நினைவுபடுத்தியது. ‘ஊஞ்சல்’ பகுதியில் மனதையும் சுத்தப்படுத்துதல் அழகு என்று ஆணி அடித்த மாதிரி சொல்லிவிட்டார் தீபா நாகராணி. சுரைக்காயின் பண்புகள் அருமை.-எஸ்.வளர்மதி, கொட்டாரம்.