ப்ரியங்களுடன்



அடேயப்பா... விதவிதமான தகவல்களைத் திரட்டி, ஒரு திரட்டுப்பால் தரும் இனிமையை வழங்கிவிட்டது ‘வெரைட்டி ஸ்பெஷல்’. பாராட்டுகள்!
- சங்கீதா என்.ஸ்ரீதர், பெங்களூரு-43 மற்றும் உமா குணசேகரன், நெல்லூர்-1.

உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவை நிரம்பிய விருந்தை உண்ட மகிழ்ச்சியை உணர வைத்துவிட்டது ‘வெரைட்டி ஸ்பெஷல்’. ‘உலகின் டாப் 10 கடற்கரைகள்’ பற்றிய தகவல்கள் அருமை. ‘ஆந்திரா ஸ்பெஷல் 30’ படித்ததுமே நாக்கில் எச்சில் ஊற வைத்துவிட்டது.
- உஷா முத்துராமன், மதுரை-6 (மின்னஞ்சலில்)... 

ரத்தக் கொதிப்பு என அறியாமல் ‘மயக்கமாக இருக்கிறது’ என்று சிலர் சோர்ந்து படுப்பார்களே தவிர, ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து பார்க்க மாட்டார்கள். ‘சைலன்ட் கில்லரை’ புரிந்து கொள்ள உதவும் கட்டுரை! பாராட்டுகள்!
- ஜே.தனலட்சுமி, சென்னை-12 மற்றும் வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

மேரி அன்னிங்கின் சாதனை வியக்க வைத்தது. அவர் பற்றி அறியாத தகவல்கள்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை மற்றும் வேணி ரமேஷ், சென்னை-15.

ஆண்தான் முடி திருத்த வேண்டுமா? செய்து காட்டி சாதனை படைத்திருக்கிறார் பாட்ரீசியா!
- குமாரி சுப்பிரமணியன், திருப்பத்தூர்.

கண்களில் ஊனம்... மனதில் தன்னம்பிக்கை... ராதாபாய் மற்றொரு ஹெலன் கெல்லர்!
- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.

‘சுற்றுலா’ ஏலகிரியையே கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.
- வி.கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பெண்கள், முதியோர் பாதுகாப்புக்கு சொன்ன ஆலோசனை அனைத்தும் பயனுள்ளவை.
- வத்சலா சதாசிவன், சென்னை-64 மற்றும் பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

பெண்கள், முதியோர் பாதுகாப்புக் குறித்து வழக்கறிஞர் சாந்தகுமாரியும் திலகவதி ஐ.பி.எஸ்ஸும் கூறியிருந்த கருத்துகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
- ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91 மற்றும் வளர்மதி ஆசைத்தம்பி,
தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்)... 

பாலியல் வன்முறை ஆண் குழந்தைகளுக்கும் நடப்பதுண்டு. அதை அழுத்தமாக உணர்த்தியிருந்தார்கள் ‘குட் டச்... பேட் டச்...’சில் பல பிரபலங்கள். ‘வெப் வேர்ல்ட் ஆஃப் வுமன்’ல் ஒரு கட்டுரை முக்கியமானது. நானும் 70ஐத் தொட இருக்கும் பாட்டி. ‘இப்படி ஒரு பாட்டி இருந்தார்’ என்று என் பேரக் குழந்தைகள் சொல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்!
- எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை.

மெனோபாஸும் தூக்கமின்மையும்... கீதா அஷோக்கின் அட்வைஸ் பிரமாதம்.
பி.கீதா, சென்னை-68.

எல்லா இதழ்களுமே ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை, பிரமாண்டத்தை, அதன் பின்னாலுள்ள உழைப்பை, அரங்கத்தை பாராட்டின. ஆனால், அதன் நாயகிகளை அறிமுகம் செய்யவேயில்லை. தோழி மட்டுமே அந்த நாயகிகளின் நேர்காணலைத் தந்தது. பாராட்டுகள்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.

மாடர்ன் பெண்களை ‘பொன்னியின் செல்வி’களாக பாராட்டியது பாராட்டத்தக்கது.
- பி.வைஷ்ணவி, சென்னை-68 மற்றும் ப.மூர்த்தி பெங்களூரு-97.

துணிவும் தன்னம்பிக்கையும் இருந்தால் ஜெயித்துக் காட்டிவிட முடியும் என்பதற்கு பீனிக்ஸ் பெண் அஞ்சலி உதாரணம். ஜோஷ்னா சின்னப்பா கட்டுரை அருமை. ‘சர்க்கரைவள்ளிக் கிழங்கு’ ரெசிபிகள் வித்தியாசம். ‘ஒரு கேள்வி... ஒரு மனசு!’... என்னமாய் பதில் சொல்கிறார்கள் நம் தோழிகள்!

குழந்தைகளுக்கு ‘எது ஒழுக்க விதி?’ என்று அழகாகச் சொல்லிப் புரிய வைத்துவிட்டார் சாலை செல்வம். தீபா நாகராணி சொன்னது போல திருவிழாக்கள் கொண்டாட்டங்களே! ரத்னாவின் செய்தி வாசிப்பைப் போலவே அவருடைய அறிவுரையும் அழகு. ‘கவிதை முற்றம்’ படங்களும் கட்டுரையும் நினைவில் கொள்ள வேண்டியவை.
- ராஜி குருஸ்வாமி, சென்னை-88.

‘ஃபிட்னஸ்’ பயனுள்ள பகுதி. ‘சாக்லெட் லைஃப்’ இனிப்பு. ‘வாழ்க்கையின் வண்ணங்கள்’ வியப்பு! ‘ஹோம் கார்டன்’ நிறைவு. ‘ஒரு கேள்வி... ஒரு மனசு’ உற்சாக ஊற்று.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.