நியூ(ஸ்) பஜார்



அள்ளிக்கலாம்...ஆடிக்கு!

‘ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’ என்பது பழைய பழமொழி. அம்மி பறக்கிறதோ இல்லையோ, ஆடி வந்தால் தள்ளுபடி விற்பனை நிச்சயம் உண்டு என்பது பல நிறுவனங்களின் உறுதிமொழி. மக்களின் ஆர்வம் அதிகம் இருப்பது ஜவுளி ரகங்களிலும் நகைகளிலும்தான். காரணம், தொடர்ந்து வரும் பண்டிகைகளுக்கு அச்சாரம் இந்த ஆடி மாதம். அம்மன் கோயில்களில் விழாக்கள் களை கட்டுவதும், ஆடிப்பெருக்கு,

ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என முக்கியமான விசேஷ தினங்கள் அணிவகுப்பதும் இந்த மாதத்தில்தான். பல கடைகளில் பல பொருட்களை ஆடித் தள்ளுபடியில் அள்ளலாம்!
உதாரணத்துக்கு சில நிறுவனங்களின் ஆடிப் புதுவரவுகளும் சிறப்புத் தள்ளுபடிகளும் இங்கே...

ஆடிக்காத்து! அதிர்ஷ்டக்காத்து!

‘ஃப்ரெஷ் கலெக்ஷன்ஸ்’... ‘ஃபென்டாஸ்டிக் செலக்ஷன்ஸ்!’ என்ற முழக்கத்துடன் களமிறங்கியிருக்கிறது ‘தி சென்னை சில்க்ஸ்’. ‘வருடத்துக்கு ஒருமுறை இந்தியாவின் தலைச்சிறந்த ஜவுளி மில்கள், தங்கள் தயாரிப்புகளை அடக்க விலைக்கே கொடுப்பார்கள். அது போன்ற புத்தம் புதிய ஆடைகளை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விற்பனையில் வழங்குகிறோம்’ என்கிறது இந்நிறுவனம்.

 பட்டில் மட்டும், ‘காஞ்சி சாடின் சில்க்’, ‘மல்டி 2 part ஆல் ஓவர் டிசைன்’, ‘சில்க் காட்டன் உப்படா’, ‘ஜாம்தானி கலெக்ஷன்’, ‘Traditional ஆன்டிக் சக்ரா எம்போஸ்’, ‘கிளாசிக் வெர்டிகல்ஸ்’, ‘சில்வர் பார்டர் Half - Half’, ‘காஞ்சி ரெயின்போ’ என அசத்தல்  புதுவரவுகளை இந்த ஆடிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்நிறுவனம். ரகங்களுக்கு ஏற்ப 5% முதல் 50% வரை தள்ளுபடி. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 16 வரை ஆடித் தள்ளுபடி விற்பனை! : 18004252299

வித்தியாச விரும்பிகளுக்கு...

உடைகளில், ரகங்களில் எப்போதும் வித்தியாசத்தை அளித்து வருவது சென்னையில் உள்ள ‘சுந்தரி சில்க்ஸ்’. ‘இந்த ஆடி மாதத்தில் எங்கள் நிறுவனத்தில் விற்கப்படும் அனைத்து ரகங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்’ என்கிறது இந்நிறுவனம். வித்தியாசமான டிசைன்களில் பட்டு ரகங்களை ‘சுந்தரி சில்க்’ஸில் வாங்க விரும்புகிறவர்களுக்கு இது சரியான தருணம். ரகங்களுக்கு ஏற்ப 10% முதல் 50% வரை தள்ளுபடி. ஜூலை 11 முதல் 27 வரை தள்ளுபடி விற்பனை! : 044-28149999  

புத்தம் புதுசு... தள்ளுபடி விலையில்!


தள்ளுபடி என் றாலே பழைய ரகங்களை விற்பார்கள் என்கிற எண்ணம் பலருக்கு உண்டு. ‘நாங்கள் புதிய ரகங்களையே தள்ளுபடியில் விற்கிறோம்’ என்று அடித்துச் சொல்கிறது ‘போத்தீஸ்’. மும்பை, சூரத், அகமதாபாத் போன்ற இடங்களில் இருக்கும் பெரிய மில்களில் குறைந்த விலைக்கு ஜவுளி களை வாங்கி, வாங்கிய விலைக்கே வாடிக்கையாளர்களுக்கு விற்கிறது இந்நிறுவனம். ட்ரெடிஷனல், ட்ரெண்டி என ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இரண்டு ஸ்டைல்கள் மீதான விருப்பம் இருக்கும். ‘போத்தீஸ்’ அதற்காகவே இரண்டு கடைகளை சென்னையில் நடத்தி வருகிறது. பெண்களுக்குப் பொருத்தமான பல புதுவரவுகள் இந்த ஆடிக்கு! ரகங்களுக்கு ஏற்ப 5% முதல் 50% வரை தள்ளுபடி.  தகவல்களுக்கு: www.pothys.com

அழகுக்கு அழகு சேர்க்கலாம்!

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி அனைத்திலும் புதுப்புது டிசைன்களில் ஆபரணங்களை அறிமுகப்படுத்தி வரும் நிறுவனம் கஜானா ஜுவல்லரி. ஹால்மார்க் தங்க நகைகள் கஜானாவின் தனிப் பட்டறையில் வடிவமைக்கப்பட்டவை. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வைர நகைகள், தரமான பிளாட்டின ஆபரணங்கள், அழகு மிளிரும் வெள்ளி நகைகள் என பல புது வரவுகளை இந்த ஆடிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது கஜானா ஜுவல்லரி. ஆடிக்கு ஆபரணம் வாங்கலாம்... அழகை ஒளிரச் செய்யலாம்!   தகவல்களுக்கு: www.khazanajewellery.com