இவள்



தமிழ்நதி ராஜராஜன் கவிஞர்

வாழ்வின் வசந்தகாலம்... இலையுதிர்காலம்... எந்த காலணி கொண்டு
கடக்கிறீர்கள்?
வசந்தகாலத்தை ‘இது நிரந்தரமில்லை’ என்ற நிதானத்தோடும், இலையுதிர்காலத்தை ‘அடுத்து இளவேனில்’ என்ற நம்பிக்கையோடும் கடந்து
செல்கிறேன்.

பிறந்தவீட்டு மண்வாசனை? புகுந்த வீட்டு மண்
வாசனை? வித்தியாசங்கள் சிலது...
நான் புகுந்த வீட்டில் வாழ்ந்ததேயில்லை. அங்கு அவ்வப்போது போய் வந்ததோடு சரி. இரண்டு இடங்களிலும் மனிதர்கள்தான் வேறு வேறு. அன்பும் மண்
வாசனையும் ஒன்றேதான்.

அழகாக வீற்றிருக்கும் அந்த அலமாரி உறை அச்சு
நண்பர்களைக் (புத்தகங்கள்) குறித்து சில வரிகள்?
என்னை மீட்டுருவாக்கம் செய்யும் மாயசஞ்சீவினி,
இன்னமும் உயிரோடு வைத்திருக்கும் உற்ற துணை, நான் விரும்பித் தொலைந்துபோகும் அற்புத உலகம்.

புனுகு சீவன்களும் நீங்களும்...
இவர்கள் தவிர நேசிக்கும்
இன்ன பிறர்?
குழந்தைகள்.

புனுகு சீவன்களும் நீங்களும்...
இவர்கள் தவிர நேசிக்கும்
இன்ன பிறர்?
குழந்தைகள்.