சிவாஜி குரலில் வாசிக்கவும்!



பெண்களுக்கு முக்கியம் - வீடா? வேலையா?
ரெண்டும் இரண்டு கண்கள் மாதிரி. நான் எந்தக் கண்ண
சொல்லுவேன்? (சிவாஜி குரலில் வாசிக்கவும்)
- அபிராமி நாச்சியப்பன்

புத்தகக் கண்காட்சிகளுக்குப் போவதுண்டா? நீங்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள்
எவ்வகையைச் சார்ந்தது?
புத்தகங்களை என்னுடைய சுவாசம் என்றே சொல்லலாம். தமிழில் சுஜாதா, கீதா பென்னெட், வாஸந்தி, ஸ்டெல்லா புரூஸ்...
ஆங்கிலப் புத்தகங்களின் பட்டியல்  நீளமானது... முடிவே இல்லாதது!
- சோலை சோமசுந்தரம்

எது விட முடியாத நல்ல பழக்கம்? கெட்ட பழக்கம்?
விட முடியாத நல்ல பழக்கம்: உடம்பு சரியில்லாத போதும் தவறாது உடற்பயிற்சி செய்வது.
கெட்ட பழக்கம்: சூரியனைப் பார்த்த பின்பும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவது.
- சிவப்ரியா கோபால்

வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என நீங்கள் நினைப்பது?
அம்மா வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும் வாழ்க்கை சொர்க்கம். அதே வேலை, திருமணம் ஆன பின் குடும்பப் பொறுப்புகளிடையே சிக்கித் திண்டாடும் நிலைமையைக் கொண்டு வந்துவிடும்.

நிறைய சின்னச் சின்ன சந்தோஷங்களை இழக்க நேரிடும். அவளுக்காகச் செலவிடும் நேரம் குறைவு. இரு இடங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். கூடவே அவளுக்கான வெகுமதி என எதுவும் இல்லை. உழைத்து உழைத்து ஓடானது தான் மிச்சம்.  எனினும் பெண் இது எது குறித்தும் கவலைப்படாது தன் பணியில் உறுதியாகத்தான் இருக்கிறாள்!
- த.மீனாட்சி

கணவருடன் பேசிய முதல் வார்த்தை?
சமைக்கத் தெரியுமா? - கணவரின் கேள்வி.
தெரியும் - என் பதில்.
- அலமேலு ராமநாதன்

தொகுப்பு:
அன்னபூரணி நாராயணன்
கிர்த்திகா தரன்