மேஜிக் தீவு



நான்கு பகுதிகளும் நீரினால் சூழப்பட்ட நிலப்பகுதியை தீவு என்று அழைக்கிறோம். பெரும்பாலும் இந்தத் தீவுகள் கடலுக்குள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் செயல்பாடுகளாலும் தாமாகவும் உருவானவை. ஆனால், ஹவாய் தீவில் ஹொனோலூலு நகரத்தில் உள்ள ஒரு தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தீவில் மீன் பிடிக்கலாம், ஸ்கூபா டைவிங் செய்யலாம், சர்ஃபிங், விதவிதமான உணவகங்கள் என ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன. பிக்னிக் செல்ல உகந்த இடம் என மக்கள் கொண்டாடுகிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்டதால் இதை மேஜிக் தீவு என்று அழைக்கின்றனர்.