ஸ்மார்ட் கிளவுஸ்



உலகில் மூன்று கோடிக்கும் அதிகமானோர் பேசும் திறன் அற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள சைகை மொழி மட்டுமே இருக்கிறது. ஆனால்,  தங்களைப் போலவே சைகை மொழி அறிந்தவர்களுடன் மட்டுமே அவர்களால் தொடர்புகொள்ள முடியும். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது.

இந்நிலையில் கென்யாவைச் சேர்ந்த 25 வயது இளைஞரான ராய் அலேலா ஸ்மார்ட் கிளவுஸ் என்ற அதிநவீன கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இந்தக் கருவியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார், சைகை மொழியை ஆடியோவாக மாற்றிக்கொடுக்கும். இதனால் பேசும் திறன் அற்றவர்கள் நம்மிடம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை துல்லியமாக புரிந்துகொண்டு அவர்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.

தன்னுடைய உறவினரின் குழந்தைக்காக இதைக் கண்டுபிடித்திருக்கிறார் ராய். ஆனால், இது உலகம் முழுவதும் உள்ள பேசும் திறன் அற்றவர்களுக்கான தொடர்பு சாதனமாக பயன்படப்போகிறது.