விண்ணைத்தொடும் கட்டடங்கள்



சூப்பர் உயர கட்டடங்கள் என்ற அந்தஸ்தை பெற வேண்டுமானால் அவை 980 அடி அல்லது அதற்கு மேல் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி 2018-ல் 18 கட்டடங்கள் கட்டப்பட்டன. 2019-ல் இது 26 ஆக உயர்ந்துவிட்டது. இதுவரை இவ்வளவு உயர கட்டடங்கள் ஒரே வருடத்தில் கட்டப்பட்டதில்லை. இவற்றில் மிக உயரமான ஐந்து  கட்டடங்களைப் பார்ப்போம்:

தி லக்தா சென்டர் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாஐரோப்பாவின் மிக உயர மான கட்டடம் என அழைக்கப்படும் இதன் உயரம் 1515 அடி. வருங்காலத்தில் பிரபல ஆற்றல் நிறுவனமான `Gazprom’-ன் தலைமையகமாக இது செயல்படுமாம். 90 டிகிரியில் சுழலும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
தி லியோனார்டோ - தென்னாப்பிரிக்கா

கட்டடம் முடிவதற்கு முன்பே 2015-ல் இதன் உச்சியில் உள்ள ஒரு வீடு உலகில் மிக அதிகபட்சமாக 12.4 மில்லியன் டாலருக்கு விலை போனது. இதன் உயரம் 752 அடி.இதனுள் 128 அறை கொண்ட ஹோட்டல் உள்ளது. தவிர,  11 மாடிகள் வியாபார அலுவலகங்களுக்கும் பிரித்து தரப்பட்டுள்ளது.

தி ஆல்டயர் கட்டடம் - கொழும்பு

இரு கோபுரங்கள் கொண்ட இதில் செங்குத்தான கோபுரத்தின் (787 அடி) மீது, சாய்வு கோபுரம் (686 அடி) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமி
அதிர்ச்சியின் அதிகபட்ச 7 மேக்னிடியூட் அளவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

தி கிரேட் மசூதி - அல்ஜீயர்ஸ் நகர், அல்ஜீரியா

ஆப்பிரிக்காவின் மிக உயரமான கட்டடம் இது. உயரம் 869 அடி. இந்த உயரத்தை அடைய முக்கிய காரணம், இதன் உச்சியில் உள்ள ஸ்தூபி! இது உலக மசூதிகளின் உச்சியில் அமைந்துள்ள ஸ்தூபிகளில் மிகவும் பெரியது. 9 மேக்னிடியூட் பூமி அதிர்வை சமாளித்து, நிலையாக நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்பினிட்டி கோஸ்ட் டவர் - பிரேசில்

இந்தக் கட்டடத்தின் உயரம் 234.6 மீட்டர். பொதுவாக பிரேசிலில் 200 மீட்டர் உயரம் கொண்ட கட்டடங்களே இதுவரை உயரம் மிக அதிகம் கொண்டவையாக இருந்தன. இதனை இன்பினிட்டி கோஸ்ட் டவர் முறியடித்துள்ளது. இத் தனைக்கும் இந்த நாட்டில் விண்ணைத்தொடும் கட்டடங் களுக்கு பஞ்சமே இல்லை.

ராஜிராதா