காற்று மாசுபாட்டிலிருந்து மக்களைக் காக்க போராடும் பெண்!



சூரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஸ்ரூச்சி வடலியா. சில மாதங்களுக்கு முன்பு அவரது மூளையில் கட்டி இருப்ப தாக கண்டுபிடிக்கப்பட்டது. 27 வயதான வடலியா தனக்கிருக்கும் நோய் குறித்து கவலைப்படவில்லை.
அதே நேரத்தில் புற்று நோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களுக்கு ஆதாரமாக காற்று மாசுபாடு இருப்பதாக உறுதியாக நம்பினார் வடலியா. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த வடலியா, இன்று 30 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டுள்ளார். தவிர, குஜராத்தில் உள்ள கிராமங் களுக்கும் பள்ளிகளுக்கும் சென்று மரம் நடுவதன் அவசியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

இறந்துகொண்டிருக்கும் நேரத்திலும் மற்றவர்களின் நலனுக்காகப் போராடும் வடலியாவை இணைய உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. ‘‘நான் சீக்கிரம் இறந்துவிடுவேன். ஆனால், நான் நட்டுவைத்த மரங்களில் இருந்து வெளியாகும் காற்றைச் சுவாசிக்கும் மக்களின் சுவாசத்தில் என்றென்றும்
வாழ்ந்திருப்பேன்...’’ என்று நெகிழ்கிறார் வடலியா.