ஆரஞ்சு வானம்



ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஒரு காட்டு காட்டிவிட்டது. சுமார் 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள காடு அழிந்துவிட்டது. அதாவது அயர்லாந்தின் பரப்பளவுக்குச் சமமான காடு அழிந்துபோனது.  24 பேர் மரணமடைந்தனர். இரண்டாயிரத்துக்கு மேலான வீடுகள் தீக்கிரையானது. கோடிக்கணக்கான வன உயிரினங்கள் மடிந்தன.

காட்டுத்தீயினால் உண்டான புகை 6 ஆயிரம் மீட்டர் உயரத்துக்குச் சென்றுவிட்டது. தவிர, அந்தப் புகை கடலைத் தாண்டி இரண்டாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து நியூசிலாந்திலும் முகாமிட்டிருக்கிறது. அதனால் நியூசிலாந்தின் வானமே ஆரஞ்சு வண்ணத்தில் மாறிவிட்டது.

இதுபோக 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பிரேசிலிலும், சிலியிலும், அர்ஜெண்டினாவிலும் இந்த புகை மண்டலம் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் புகை பெரியளவில் உடலுக்கு ஆபத்தில்லை என்பதுதான் ஒரெயொரு ஆறுதல்.