வைரல் சம்பவம்



கம்ப்யூட்டர், மொபைல் போன் சார்ஜர், வாஷ் பேசின், ஹேண்ட் வாஷ் என சொல்லும்போதே ஏதாவது ஹோட்டல் அறை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது மும்பையில் ஓடும் ஆட்டோ. அதுவும் முதல் ஹோம் ஆட்டோ.

வீட்டில் இருக்கும் உணர்வை வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஹோம் ஆட்டோவை வடிவமைத்திருக்கிறார் சத்யவான். இத்தனை வசதிகளைச் செய்தும் அவர் கட்டணத்தை உயர்த்தவில்லை. இணையத்தில் ஹோம் ஆட்டோ தான் இப்போது செம வைரல். இதுபோக முதியவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது சத்யவானின் கொள்கை.