பிளாட்டிபஸ்



விந்தையிலும் விந்தையான ஓர் உயிரினம் பிளாட்டிபஸ். வாத்தைப் போல அலகைக் கொண்ட இது எலியைப் போல மண்ணுக்குள் வளை பறித்து வாழும். மீன்களைப் போல தண்ணீருக்குள் நீந்தும். பறவைகளைப் போல முட்டையிட்டு அடைகாக்கும். குட்டிகளுக்கு பாலூட்டும். 18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இப்படி ஒரு உயிரினம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியவந்தது.

இதன் எலும்புக்கூட்டை வைத்து ஆராயும் போது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பிளாட்டிபஸ் பூமியில் வாழ்ந்து வரலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தோலுக்காகவும் ரோமத்துக்காகவும் பிளாட்டிபஸ் வேட்டையாடப்படுவதால் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன.

அதிகபட்சமாக பன்னிரண்டு ஆண்டுகள் வரை பிளாட்டிபஸ் உயிர்வாழ்கின்றது. ஆஸ்திரேலியாவின் சில உயிரியல் பூங்காக்களில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த விநோத உயிரினத்தை வெளியே எங்கேயும் கொண்டு செல்ல முடியாது.