பாதிப்பு



உலகப்புகழ் பெற்ற நகரம் வெனிஸ். கடல் நீர் மட்டம் உயர்வு, பெருமழை காரணமாக நகரத்தின் 85 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கிறது. இதில் பழமையான பல கட்டடங்களும் பாதிக்கபபட்டுள்ளன.
முக்கியமாக வெனிஸ் நகர பொருளாதாரமே சுற்றுலாவை நம்பித்தான் உள்ளது. வெள்ளம் பல வியாபாரிகளின் லாபத்தையும் மூழ்கடித்துள்ளது. கடந்த 50 வருடங்களில் இல்லாத வெள்ளத்தை வெனிஸ் எதிர்கொண்டுள்ளது.