வைரல் சம்பவம்



கிறிஸ்துமஸ் வரப்போகிறது.  பெற்றோர்களிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்கும் என்பதால் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள். அதில் கிறிஸ்துமஸ் பரிசாக என்னென்ன வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

இதில் விசேஷம் என்னவென்றால் அந்த பரிசுப்பொருட்கள் எல்லாமுமே விலையுயர்ந்தவை. ஆப்பிள் மேக் புக் ஏர், ஐபோன் 11, சேனல் பர்ஸ், 4000 டாலர் ரொக்கம் என்று நீள்கிறது அந்தப் பட்டியல். மகளின் பரிசுப் பட்டியலை தந்தை டுவிட்டரில் பகிர, வைரலாகிவிட்டாள் அந்த காஸ்ட்லி மகள்.