ஆவலைக் கிளப்பும் கொரியன் போன்!



எவ்வளவோ நவீன தொழில்நுட்பங்களுடனும், விதவிதமான மாடல்களிலும் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இதில் மாற்றங்கள் நிகழ்ந் திருக்கின்றன.

இருந்தாலும் தனக்கென ஒரு வாடிக்கையாளர் பட்டாளத்தை இன்றும் தக்கவைத்துக்கொண்டுள்ள ஒரு நிறுவனம் ‘சாம்சங்’. சமீபத்தில் ‘சாம்சங்’கிடமிருந்து புதிதாக எந்த மாடலும் வெளிவர வில்லை.

மற்ற நிறுவ னங்கள் எல்லாம் வாரத்துக்கு ஒருமுறையாவது தங்களின் அடுத்த மாடலைப் பற்றி விளம்பரம் செய்துவருகிறது. இந்நிலையில் கொரியன் இணையதளத்தில் ‘சாம்சங் கேலக்ஸி ஏ 51’ என்ற மாடல் டிஸ்பிளேயாகி பெரும் அதிர்வை கேட்ஜெட்ஸ் வாடிக்கையாளர் களிடையே கிளப்பியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான ‘கேலக்ஸி ஏ50’ மாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் அப்டேட் வெர்ஷன்தான் இது. ‘ஏ 51’-இல் என்னென்ன அமசங்கள் இருக்கின்றன என்பது கூட  கசிந்துவிட்டது. அதையும் பார்த்துவிடுவோம்.

 மிகவும் அழகாக, ஸ்டைலிஷாக வடிவ மைத்திருக்கிறார்கள். 6.5 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டியில் மெலிதான டிஸ்பிளே நம் ஆர்வத்தைக் கிளறுகிறது, 48 எம்பியில் முதன்மை கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ் பொருத்தப்பட்ட 12எம்பி கேமரா, 5 எம்பியில் டெப்த் சென்சார் கேமரா, 12 எம்பியில் டெலிபோட்டோ லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா என நான்கு பின்புற கேமராக்கள், அத்துடன் செல்ஃபிக்கு 32 எம்பியில் ஒரு கேமரா, 4000 mAh பேட்டரி திறன், 4 ஜிபி ரேம் என நம் ஆவலைக் கிளப்புகிறது இந்தக் கொரியன் போன்.  விலை 20 ஆயிரத்துக்குள் இருக்கலாம். போன் வெளிவரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.