ஆசியாவிலேயே சிறிய நாடு எது?



மடகாஸ்கரில் காணப்படும் 80 சதவிகித தாவர, விலங்கு இனங்களை உலகில் வேறெங்கும் காண முடியாது.பிரான்ஸுக்கும் இத்தாலிக்கும் அருகிலுள்ள மொனாகோ, உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பு கொண்ட இரண்டாவது நாடு (1.98 சதுர கிலோமீட்டர்).கொலம்பஸ் 1493-ல் கண்டறிந்த ‘செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ்’ என்ற நாட்டில் 2 விமான நிலையங்களே உள்ளன.

மக்கள்தொகையிலும் நிலப்பரப்பிலும் ஆசியாவிலேயே சிறிய நாடு மாலத்தீவு.மங்கோலியாவுக்கு அடுத்து, உலகில் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்ட இரண்டாவது நாடு நமீபியா.நைஜீரியாவில் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் சரிபாதி அளவு வசிக்கின்றனர்.அரபு உலகில் அதிகம் வளர்ச்சி பெற்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க ஓமனில் சராசரி ஆயுட்காலம் 74 ஆண்டுகள்.

உலகின் சிறிய நாடுகளில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது மால்டா.இரண்டாம் உலகப்போரில் பெரிதும் பாதிக்கப்பட்டாலும் போலந்து தன் கலாசாரச் செல்வத்தைப் பேணிக் காத்து வருகிறது.அணுசக்தி தயாரிக்கும் முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான்.