செயற்கை கூடு



அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ளது வடக்கு கரோலினா மாகாணம்.  அங்குள்ள ஒரு காட்டில் பைன் மரங்கள் அடர்ந்து காட்சியளிக்கின்றன. அதில் ஒரு பைன் மரத்தில் மரங்கொத்திக்காக பிரத்யேகமான கூட்டை செயற்கையாக வடிவமைத்துள்ளனர்.
மரங்கொத்தி தங்க, ஓய்வெடுக்க, பாதுகாப்பாக இருக்க அந்தக் கூடு ஏதுவாக உள்ளது. அருகி வரும் பறவைகளின் பட்டியலில் இடம்பெற்றதிலிருந்து மரங்கொத்திகள் தீவிரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.