சுழலும் செல்ஃபி கேமரா!



ஏதாவது புதிதாக செய்தால்தான் சந்தையைப் பிடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ஸ்மார்ட்போனைச் சொல்லலாம். அந்த வகையில் ஸ்மார்ட்போன் ஜாம்பவானான ‘ஹூவாய்’ அதிரடியாக ஒன்றைச் செய்யவிருக்கிறது. அதன் அடுத்த மாடல் போனில் செல்ஃபி கேமரா சுழலும் விதமாக வடிவமைக்கப்படவுள்ளது.

‘சாம்சங்’, ‘ஓப்போ’ போன்ற நிறுவனங்கள் சுழலும் செல்ஃபி கேமராவைப் பற்றி சொல்லிவந்தன. ஆனால், அதைச் செயல்படுத்த விருக்கிறது இந்த சீன நிறுவனம். பாப்-அப் முறையில் இயங்கும் செல்ஃபி கேமரா 180 டிகிரி வரை சுழலும். அதனால் செல்ஃபி கேமராவுக்குத் தகுந்த மாதிரி நீங்கள் போஸ் கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் எப்படி போஸ் கொடுத்தாலும் அதை அழகாக கிளிக் செய்துவிடும் இந்த சுழலும் கேமரா.