புத்தகக் காதல்



கடந்த மாதத்தில் இருந்து லெபனானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. பெய்ரூட்டின் முக்கிய சாலைகளையெல்லாம் போராளிகள் அடைத்துவிட்டனர்.
பொருளாதாரச் சீரழிவு, வறுமை,  மெத்தனப்போக்கு என பல காரணங்களை அரசுக்கு எதிராக அடுக்குகின்றனர். கிடைத்த இடைவெளியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவில் பெய்ரூட்டின் பிரதான சாலையில் அமர்ந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை வாசிக்கின்றனர் போராளிகள்.