பால் இயந்திரம்!



சமீபத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக மெட்ரோ டிக்கெட்டை இலவசமாகக் கொடுத்து அசத்தியது ரோம். இப்போது இங்கிலாந்தில் உள்ள ஆல்டர்னிஸ் வைல்டு டிரஸ்ட் என்ற நிறுவனம் பால் வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த இயந்திரத்தில் இரண்டு துளைகள் இருக்கும். ஒன்றில் ஆடையுடன் கூடிய பாலும், இன்னொன்றில் ஆடையில்லாத பாலும் வரும். இந்த இயந்திரத்தின் வழியாக பால் வாங்குபவர்களுக்கு ஒரு கண்ணாடி பாட்டிலைத் தருகிறார்கள்.

அதில் நாம் பால் பிடித்துக்கொள்ளலாம். அந்தக் கண்ணாடி பாட்டிலைக் கழுவி மறுபடியும் மறுபடியும் பால் பிடித்துக்கொள்ளலாம். இதனால் பாலை பாக்கெட் செய்வதற்கான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைகிறது. இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2020-இல் பல இடங்களில் ஆல்டர்னிஸ் தன்னுடைய பால் வழங்கும் இயந்திரங்களை நிறுவவிருக்கிறது.