கடலுக்குள் டென்னிஸ் மைதானம்நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ‘உலகிலேயே முதல் முறையாக துபாயில் கடலுக்குள் டென்னிஸ் மைதானம்’ என்ற செய்தி பல பத்திரிகைகளை அலங்கரித்தது. செய்தியைப் படித்த எல்லோருமே ஆடிப்போயினர்.
அப்போதே இந்த மைதானத்துக்கான பட்ஜெட் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்.  போலந்தைச் சேர்ந்த கட்டடக்கலைஞர் கிறிஸ்டோப் கோட்டாலா தான் இதன் டிசைனர். நிதிப்பற்றாக்குறையால் இந்தத் திட்டம் அப்படியே நின்றுபோனது. மீண்டும் இப்போது தூசு தட்டி வெளியே எடுத்திருக்கிறார் கோட்டாலா. இதற்காக பலரிடம் நிதி கேட்டு வருகிறார்.