இனியும் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம்



உலக வெப்பமயமாதலைப் பற்றி பல வருடங்களாக பேசிக்கொண்டே இருக்கிறோம். இனியும் பேசிக்கொண்டே இருக்காமல் ஏதாவது நடவடிக்கை எடுங்கள். அப்படியில்லை என்றால் பூமியே நெருப்புக்கு இரையாகிவிடும் என்று எச்சரிக்கிறது சமீபத்தில் அரங்கேறிய ஒரு சம்பவம்.

உலகின் மிகக் குளிர்ந்த பகுதி ஆர்க்டிக். நார்வே, ஸ்வீடன், ரஷ்யா, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆர்க்டிக் வட்டம். இந்த வட்டத்துக்குள் இருக்கும் பல காடுகள் வெப்பநிலை அதிகரிப்பால் தீப்பற்றி எரிகின்றன. அதுவும் ஒரு குளிர்ப்பிரேதேசத்தில் இப்படி நடப்பது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கடந்த மாதம் மட்டும் கிரீன்லாந்தில் 217 பில்லியன் டன் அளவுள்ள ஐஸ்கட்டிகள் உருகி கடலில் கலந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் அதிக வெப்பம். இதனால் கடலின் மட்டம் 0.5 மில்லி மீட்டர் உயர்ந்துள்ளது. இனியும் தாமதிக்காமல் உலக வெப்பமயமாதலைத் தடுக்க களத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.